Web Ads

குட் நைட் பட இயக்குனருக்கு பிறந்தநாள் பரிசு கொடுத்த சிவகார்த்திகேயன்..!

குட் நைட் பட இயக்குனருக்கு பிறந்தநாள் பரிசு கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன்.

Sivakarthikeyan gifted Good Night director on his birthday
Sivakarthikeyan gifted Good Night director on his birthday

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.

அதனைத் தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராசி என்ற படத்திலும், சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த இரண்டு படத்தில் படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் குட் நைட் படத்தின் இயக்குனரான விநாயக் சந்திரசேகருக்கு பிறந்தநாள் பரிசு கொடுத்துள்ளார். இது குறித்து விநாயக் சந்திரசேகரன் அவரது ட்விட்டர் பக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதில் வாழ்த்துக்கள் மற்றும் பரிசுக்கு மிக்க நன்றி சிவகார்த்திகேயன் அண்ணா இந்த வருடம் பிறந்த நாளை இது மிகவும் சிறப்பாகியது என்று பதிவிட்டு உள்ளார்.

இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.