ஒரே தினத்தன்று தங்களின் படங்களை வெளியிட மல்லுக்கட்டும் தமிழ் பிரபலங்கள்.

Christmas Release List 2019 : முன்பு வரை தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களின் படங்கள் மட்டுமே தீபாவளி மற்றும் பொங்கல் போற்ற தினங்களில் வெளியிடப்படுவது வழக்கமாக இருந்தது.

ஆனால், தற்போது சிறு பட்ஜெட் மற்றும் புதுமுக இயக்குனர், நடிகர்களின் படங்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

நல்ல கதை அம்சம் உள்ள படங்களை ரசிகர்கள் வரவேற்பு கொடுக்கும் பட்சத்தில் இந்த மாற்றம் தமிழ் சினிமாவில் நடந்து உள்ளது. புதுமுக நடிகர்கள் நடிக்கும் படம் என்று ஒதுக்காமல் இப்பொது எல்லா படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

ராட்சசன் பட நடிகை அம்முவா இது? பீச்சில் கொடுத்துள்ள போஸை பார்த்தீங்களா?

அதே போல தமிழ் சினிமா தயாரிப்பாளர்களின் சங்கங்களும் அதற்கு ஏற்ப விதிமுறைகளை மாற்றி உள்ளது.

புதுமுக இயக்குனர், நடிகர்கள் அல்லது பெரிய நடிகர்கள் என்று பார்க்காமல் முதலில் யார் பதிவு செய்கிறார்களோ அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அந்த படங்கள் திரையிட அனுமதிக்கப்படுகிறது.

இந்த நிலையில், தனுஷ் நடித்த “பட்டாசு” படம் தீபாவளிக்கு திரையிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில காரணங்களுக்காக ரிலிஸ் கிறிஸ்துமஸ் தினத்தன்று  வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், அதே தினத்தன்று சிவகார்த்திகேயன் மற்றும் சூர்யாவின் படங்களும் திரைக்கு வரவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

எது எப்படியோ இந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று  திரையரங்கில் கூட்டம் கூடும் என்பதில் சந்தேகமே இல்லை.