Chiyaan 60 Movie Cinematographer
Chiyaan 60 Movie Cinematographer

சியான் 60 படம் பற்றிய முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

Chiyaan 60 Movie Cinematographer : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவர் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த படங்களை தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தன்னுடைய மகன் துருவ் விக்ரம் உடன் இணைந்து தன்னுடைய 60 வது படமான சியான் 60 படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்திற்கு திறவுகோல் மந்திரவாதி என டைட்டில் வைக்கப்பட்டு இருப்பதாக சில தினங்களுக்கு முன்னர் தகவல் பரவியது. ஆனால் அது டைட்டில் அல்ல வெறும் வதந்தி தான் என படக்குழு விளக்கம் அளித்திருந்தது.

விஜய் சேதுபதியின் அடுத்த படம்.. எதிர்பார்ப்பை கூட்டும் கூட்டணி – அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?

இதனையடுத்து தற்போது இப்படம் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒப்பந்தமாகியுள்ளார்.

இவர் இதற்கு முன்னதாக தமிழில் ஜில் ஜங் ஜக், அவள், ராக்கி உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். அதுமட்டுமல்லாமல் தனுஷை வைத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ஜகமே தந்திரம் என்ற படத்தின் ஒளிப்பதிவாளரும் இவர் தான்.

இந்தப் படங்களைத் தொடர்ந்து தற்போது சியான் விக்ரமின் 60வது இடத்திலும் இணைந்துள்ளார்.