Vijay Sethupathi Next Movie Director
Vijay Sethupathi Next Movie Director

விஜய் சேதுபதியின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்பது குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Vijay Sethupathi Next Movie Director : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. கிடுகிடுவென வளர்ந்து முக்கிய நடிகராக இடம் பிடித்தவர்.

இவரது நடிப்பில் தற்போது லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், என டஜன் கணக்கில் படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

விஜய் சேதுபதி இல்லாமல் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா 2?? – முக்கிய பிரபலம் வெளியிட்ட ஷாக் தகவல்

இந்த படங்களை தொடர்ந்து விஜய் சேதுபதி அடுத்ததாக இயக்குனர் சசி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இயக்குனர் சசி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் படங்களை இயக்கி வருகிறார்.

தமிழில் சொல்லாமலே, ரோஜா கூட்டம், போ, டிஸ்ஸீம், பிச்சைக்காரன், சிவப்பு மஞ்சள் பச்சை ஆகிய படங்களை இயக்கியிருந்தார்.

காதலனுடன் ஒரே ரொமான்ஸ் மழையில் நனையும் மீரா மிதுன் – இத கவனிச்சீங்களா!

மேலும் தற்போது ஹரிஷ் கல்யாணை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தைஅடுத்து விஜய் சேதுபதியை வைத்து உருவாகும் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.