Chance heavy rain 12 districts
Chance heavy rain 12 districts

Chance heavy rain 12 districts – சென்னை: தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில், வெப்ப சலனம் காரணமாக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, பெரும்பாலான இடங்களில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழகத்தில் பல இடங்களில் சராசரியாக 100 டிகிரி வெயில் நிலவுகிறது.

இதனால் வெப்ப சலனம் ஏற்பட்டு வளி மண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி உருவாகி உள்ளது.

மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி..!

இது வங்கக் கடல் மற்றும் குமரிக் கடல் பகுதியில் நிலை கொண்டு இருப்பதால், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

இவ்வாறு வெப்ப சலனம் தொடர்ந்து நீடிப்பதால் தமிழகத்தில் விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை,கடலூர், திருச்சி, சிவகங்கை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருவாரூர் மற்றும் மதுரை ஆகிய 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

மேலும் பிற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளை பொறுத்தவரையில், ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் வட மாவட்டங்களை பொறுத்தவரையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது’ இவ்வாறு தெரிவித்தனர்.