Mettur Dam opened by CM Edappadi : Political News, Tamil nadu, Politics, BJP, DMK, ADMK, Latest Political News, Mettur Dam

Mettur Dam opened by CM Edappadi :

தருமபுரி: காவிரியில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது மேட்டூர் அணை பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

நாடு முழுவதும் தற்போது பல மாநிலங்களில், கடுமையாக மழை பெய்து வருகிறது. மேலும் மழையால் பல மாநிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. கேரளா, கர்நாடகா, குஜராத், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் மழை காரணமாக மிக மோசமான நிலையில் பாதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு பல மாவட்டங்களில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் கடுமையாக மழை பெய்து வருகிறது.

முக்கியமாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான உத்தர கர்நாடகா, சிவமோகா, பெலகாவி, மடிகேரி, மைசூர், மங்களூர், குடகு உள்ளிட்ட பகுதிகளில் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, காவிரிக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகமாகிக் கொண்டே வருகின்றது. மேலும் நேற்று அதிகாலை காவிரியில் 1.70 லட்சம் கனஅடியாகதான் நீர் வரத்து இருந்தது.

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதன்பின்தான் அதிகரிக்க தொடங்கியது.ஆனால் நேற்று இரவு நீர்வரத்து 2.95 லட்சம் கனஅடியாக உயர்ந்தது. தற்போது காவிரியில் நீர் வரத்து 2.53 லட்சம் கனஅடியாக உள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி 2-வது நாளாக அப்பல்லோ மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை.!!

மேலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 101 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 69.96 டி.எம்.சியாக உள்ளது.

இந்நிலையில் காவிரியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், தற்போது மேட்டூர் அணை பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.இதில் அமைச்சர்கள், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.