Boney Kapoor Next Tamil Project

போனி கபூரின் அடுத்த தமிழ் படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Boney Kapoor Next Tamil Project Announcement : பாலிவுட் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராகவும் நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் தமிழ் சினிமாவில் தல அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை என்ற படத்தின் மூலம் அடியெடுத்து வைத்தார்.

இந்த படத்தை தொடர்ந்து தல அஜித் நடிப்பில் உருவாகும் வலிமை படத்தையும் தயாரித்து வருகிறார். இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படமாக இருந்து வருகிறது.

இப்படியான நிலையில் போனி கபூரின் அடுத்த தமிழ் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்க அருண் ராஜா காமராஜ் இயக்க உள்ள படத்தை தான் தயாரிக்க இருப்பதாக போனிகபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அஜித் கொடுத்த வாக்குறுதி.. நிம்மதியா பெருமூச்சு விட்ட தயாரிப்பாளர் – விஷயம் இது தான்.!!

ஏற்கனவே இந்த கூட்டணி உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலமாக அதனை உறுதி செய்துள்ளார்.

இந்த அறிவிப்பை பார்த்த அஜித் ரசிகர்கள் பலரும் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு எல்லாம் இருக்கட்டும் வலிமை படத்தின் அப்டேட் எங்கே என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

விரைவில் வலிமை படத்தின் அப்டேட்டை வெளியிடுமாறும் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.