Valimai First Look Update
Valimai First Look Update

தல அஜித் கொடுத்த வாக்குறுதியை தயாரிப்பாளர் போனி கபூர் நிம்மதி அடைந்துள்ளார்.

Ajith’s Promise to Boney Kapoor : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் படத்தை தயாரித்து வருகிறார். RX100 படத்தின் ஹீரோவான கார்த்திகேயா இப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.

பாலிவுட் நடிகையான ஹீமா குரோஷி நாயகியாக நடிக்கிறார். மற்றும் பல நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம் ஊரடங்கு உத்தரவு காரணமாக படப்பிடிப்பை நடத்த முடியாமல் இருந்து வருகிறது.

பல வருடங்களுக்கு முன்பே இந்தியா சேலஞ்சை முடித்த தல அஜித் – இணையத்தில் வைரலாகும் ஆதாரங்கள்!

இயல்புநிலை திரும்பிய பின்னரே இப்படத்தின் படப்பிடிப்புகளை தொடங்க வேண்டும் என தல அஜித் கட்டளையிட்டுள்ளார். இதனால் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என தெரியாமல் இருந்து வருகிறது.

படப்பிடிப்புகள் நடைபெறாமல் இருந்து வருவதால் படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் அஜித் இந்த படத்தை கிடப்பில் போட்டுவிட்டு வேறு படத்தில் கமிட் ஆகி விடுவாரோ என வருத்தப்பட்டுள்ளார்.

ஆனால் தல அஜித் கவலைப்படாதீர்கள் வலிமை படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படத்தில் கமிட் ஆக மாட்டேன் என வாக்கு கொடுத்துள்ளார். இதனால் தயாரிப்பாளர் போனி கபூர் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

மேலும் அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி 2021 தீபாவளிக்கு தான் வெளியாகும் என கூறப்பட்டு வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.