BJP Election Results | Current Prime Minister of India Narendra Modi | India | Tamil Nadu | Lok Sabha Elections 2019 | Election Results 2019

BJP Election Results :

புதுடெல்லி: நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடந்து அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.இதில் தற்போது பாஜக முன்னிலை வகித்து வருகின்றது.

நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை, எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

முன்னிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம், தேர்தல் முடிவுகள் 11.30 மணி நிலவரம்.!

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையில், பாஜக 326 இடங்களிலும், காங்கிரஸ் 106 இடங்களிலும், மற்றவை 92 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

நாடாளுமன்றத்தின் 17வது மக்களவை தேர்தல் கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கி கடந்த 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது.

இந்நிலையில், 542 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது., மேலும் தமிழகத்தில் ஒரே கட்டமாக கடந்த மாதம் 18ம் தேதி தேர்தல் நடந்தது குறிப்பிடதக்கது.

அதோடு, 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் நடந்தது.

அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய 4 பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 19ம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

ஆகவே, காலை 9 மணி நிலவரப்படி, 326 இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. மேலும் காங்கிரஸ் 106 இடங்களிலும், மற்றவை 92 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை, திமுக 35 இடங்களிலும், அதிமுக 3 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.

543 மக்களவை தொகுதிகளில், வேலூரில் மட்டும் பணப்பட்டுவாடா புகாரால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.