சேலையில் க்யூட் போட்டோ ஷூட்.. இணையத்தை கலக்கும் பிக் பாஸ் தர்ஷிகா..!
சேலையில் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டு உள்ளார் தர்ஷிகா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன்கள் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இன்னும் இரண்டு வாரங்களில் இந்த நிகழ்ச்சி முற்றிலும் முடிவுக்கு வரவுள்ளது. யார் அந்த வெற்றியாளர் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் தர்ஷிகா.
ஆரம்ப வாரங்களில் சுறுசுறுப்பாகவும் ஆக்டிவாகவும் விளையாடி வந்து தர்ஷிகா சில வாரங்கள் விஷாலுடன் ஏற்பட்ட காதலால் விளையாட்டில் கவனம் செலுத்த முடியாமல் எலிமினேஷன் செய்யப்பட்டார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டு உள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருவது மட்டுமில்லாமல் தர்ஷிகாவை வர்ணித்தும் வருகின்றனர்.
View this post on Instagram