ஸ்டன்னிங் லுக்கில் விதவிதமாக போஸ்.. இணையத்தை கலக்கும் பிக் பாஸ் தர்ஷா குப்தா..!
ஸ்டன்னிங் லுக்கில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார் தர்ஷா குப்தா.

biggboss tharsha gupta latest photoshoot photos
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கு பெற்று மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
அதனைத் தொடர்ந்து தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக அவரது எலிமினேஷன் இருந்தது. இதனால் தர்ஷாவின் ரசிகர்கள் பலரும் அப்செட்டாக இருந்தனர்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் தர்ஷா குப்தா அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது ஜீன்ஸ் பேண்டில் ஸ்டன்னிங் லுக்கில் விதவிதமாக போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அதில், சவாலான சூழ்நிலைகள் எழும்போது தான் மனிதர்கள் சாதாரணமாக தாங்கள் இருக்கும் நிலையை விட மேன்மையான நிலைக்கு உயர முடியும் என்று தத்துவத்தை பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் தர்ஷா குப்தாவிற்கு லைக்ஸ்களை குவித்து வருவது மட்டுமில்லாமல் அவரை வர்ணித்தும் வருகின்றனர்.
View this post on Instagram