Web Ads

முதல்முறையாக விஜயை பார்த்த அனுபவம் எப்படி இருந்தது..? மமீதா பைஜூ ஓபன் டாக்.!!

முதல்முறையாக விஜய் பார்த்தபோது நடந்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் மமீதா பைஜூ.

actress mamitha baiju about thalapathy vijay

actress mamitha baiju about thalapathy vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

அதனைத் தொடர்ந்து தற்போது எச். வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை கே.வி.என் புரொடக்ஷன் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் மமீதா பைஜூ. இவர் தளபதி விஜயை முதலில் நேரில் பார்த்தபோது நடந்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

அதாவது அவரை முதலில் பார்த்தபோது பதற்றம் அடைந்து, ஹாய் சார் என்று சொன்னேன் அதற்கு மேல் பேச முடியவில்லை கைகள் நடுங்கியது.இதை புரிந்து கொண்ட விஜய் சார் என்னை நோக்கி நடந்து வந்து அமைதியாக ஹாய்மா என்று கை கொடுத்து அரவணைத்துக் கொண்டார் அந்த தருணத்தை வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை. மேலும் விஜயின் ரசிகையாக அந்த உணர்வை வெளிப்படுத்த முடியாது என்று கூறியுள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இது விஜயின் கடைசி படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

actress mamitha baiju about thalapathy vijay

actress mamitha baiju about thalapathy vijay