Web Ad 2

என் மீது அவதூறு பரப்புகிறார்கள்.. பிக் பாஸ் திவாகர் ஓபன் டாக்.!!

Web Ads

பிக் பாஸ் திவாகர் பேசி இருப்பது தற்போது வெளியாகியுள்ளது.

biggboss tamil 9 diwakar latest speech viral
biggboss tamil 9 diwakar latest speech viral

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

வாரம் வாரம் தொடர்ந்து எலிமினேஷன் நடந்து வரும் நிலையில் நேற்று வாட்டர் மேன் ஸ்டார் திவாகர் எலிமினேஷன் செய்யப்பட்டார். இவரது ரசிகர்கள் பலருக்கும் இது அதிர்ச்சியாக இருந்த நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு வீடியோ ஒன்று பேசியுள்ளார்.

அதாவது என்னை குறி வைத்து பொய்யான குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுவதாகவும் நான் சொல்லிய சில கருத்துக்களின் மீது அவதூறாக பரப்பப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளார் என்னை பலிகடாக முயற்சிப்பது சாத்தியமே இல்லை எனக்கு மக்களிடையே ஆதரவு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.