Web Ads

‘ஜெயிலர்-2’ படத்தில் வித்யாபாலனை தொடர்ந்து, மேலும் ஒரு பிரபல நடிகை..

சூப்பர் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன், கூலி படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்-2’ படத்தில் இணைந்துள்ளார். இந்தப் படமும் அதிரடி காட்டும் ஆக்‌ஷன் படம்தான்.

இதனால், ஜாலியான கலகலப்பான ஒரு படத்தில் நடிப்பதற்கு கதைத்தேடலில் ரஜினி உள்ளார். கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தை சுந்தர்.சி இயக்கவதாக இருந்த நிலையில் விலகியுள்ளார். தொடர்ந்து சில இயக்குநர்களிடம் கதைத்தேர்வு நடைபெற்று வருகிறது.

தற்போது நெல்சன் இயக்கி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமுடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, மேக்னா ராஜ் உள்பட பலர் நடிக்கின்றனர். மேலும் மோகன்லால், சிவராஜ் குமார் ஆகியோரும் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. அனிருத் இசை அமைக்கிறார். இந்தப் படம் அடுத்த வருடம் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தில் இந்தி நடிகை அபேக்‌ஷா போர்வல் இணைந்துள்ளார். இந்தியில் ‘உண்டேகி’ ‘ஹனிமூன் போட்டோகிராஃபர்’, ‘ஸ்லேவ் மார்க்கெட்’ ஆகிய வெப் தொடர்களில் மூலம் பிரபலமானவர். அபேக்‌ஷா நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு மும்பையில் படமாக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக, இப்படத்தில் நடிகை வித்யாபாலன் கமிட் ஆனது நினைவுகூரத்தக்கது.

bollywood actress joins jailer 2 movie
bollywood actress joins jailer 2 movie