முத்துக்குமரன் செய்த தவறு பற்றி கேட்ட விஜய் சேதுபதி..வெளியான இரண்டாவது ப்ரோமோ..!!
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.
தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் முத்துக்குமரன் டாஸ்க் விட்டுக் கொடுத்து விளையாடியதால் பிக் பாஸ் கொடுத்த பனிஷ்மென்ட் குறித்து விஜய் சேதுபதி கேட்கிறார். அதற்கு சக போட்டியாளர்கள் அவர் எதுக்கு பண்றாருனு அவருக்கு தான் தெரியும் என்று சொல்ல தீபக் அவ்ளோ பெரிய பந்த விட்டுட்டு நிக்கிறதுக்கான காரணம் என்னன்னு தெரியல என்று சொல்லுகிறார். உடனே விஜய் சேதுபதி தப்பு பண்ணது யாரு என்று கேட்க முத்துக்குமரன் நான் தான் என்று சொல்லுகிறார் ஆனால் தண்டனை யாருக்கு என்று கேட்க சகப் போட்டியாளர்களை கை காமிக்கிறார்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram