Pushpa 2

எப்ப பாத்தாலும் உங்க கால்ல விழுந்துகிட்டே இருக்கணுமா? பொங்கி எழுந்த ஜாக்லின்.., வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

பிக் பாஸ் இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் இந்த நிகழ்ச்சி ஆண்கள் பெண்கள் என இருவரும் தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

Bigg Boss Season 8 Tamil Day 46 Promo 2 Update
Bigg Boss Season 8 Tamil Day 46 Promo 2 Update

தற்போது பிக் பாஸ் தர்பார் என்ற டாஸ்கில் ராஜாவாக ராணவும், ராணியாக சாச்சனாவும், இருக்கின்றனர். இவர் இரண்டு பெயர்களில் யார் ஜெயிக்கப் போவது என்பதுதான் டாஸ்காக உள்ளது.

இன்று வெளியான முதல் ப்ரோமோவில் பல்லக்கில் ராஜாவை தூக்கி வர ராணிக்கும் பல்லக்கில் சம உரிமை இருக்கிறது என்று கேட்கின்றனர்.ஆனால் ஆண் போட்டியாளர்கள் பல்லக்கு தர மறுக்க ராஜா பல்லக்கின் மேல் ஏறி நின்று கொண்டு இப்போ எடுத்துக் கொண்டு போக பார்க்கலாம் என்று சொல்லுகிறார்.

தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் பல்லக்கு வேண்டுமென்றால் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று பெண் போட்டியாளர்கள் கேட்க அதற்கு மூன்று பேர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்லுகின்றனர். அதற்கு ஜாக்லின் எப்ப பாத்தாலும் மன்னிப்பு மன்னிப்பு உங்க கால்ல விழுந்துகிட்டே இருக்கணும்மா என்று கேட்கிறார்.

அதற்கு சாச்சனா மன்னிப்பு கேட்டு தான் பல்லுக்கு தருவாங்களா அப்படிப்பட்ட பல்லக்கு தேவையில்லை யாரும் மன்னிப்பு கேட்க வேண்டாம் நான் இந்த இடத்தை விட்டு நகரமாட்டேன் என்று சொல்லி விடுகிறார்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.