பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் யார் தெரியுமா? முழு விவரம் இதோ..!
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப் போகும் போட்டியாளர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் சௌந்தர்யா, ராணவ், தீபக், ஜாக்லின், ஜெஃப்ரி, ரஞ்சித், தர்ஷிகா, சத்யா, சச்சனா, சிவகுமார், மஞ்சரி, ரியா, வர்ஷினி என 13 பேர் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர்.
அதில் குறைவான ஓட்டுக்களுடன் சிவகுமார், மஞ்சரி, ரியா, வர்ஷினி கடைசி இடங்களில் உள்ளனர். இந்த நால்வரில் ஒருவர் இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் யார் இருக்கலாம்? இருக்க வேண்டாம்?என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.