BCCI Ombudsman reduces Sreesanth life ban
BCCI Ombudsman reduces Sreesanth life ban

BCCI Ombudsman reduces Sreesanth life ban – முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஸ்ரீசாந்த்.

கேரளாவைச் சேர்ந்த இவர் ஐபிஎல் தொடரில் விளையாடும்போது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்து வழக்கை நடத்தி, குற்றமற்றவர் என்று நிரூபித்தார்.

முதல்ல இவளை வெளியே அனுப்புங்க.. பிக் பாஸ் குறித்து விஜய் டிவி ரோபோ ஷங்கர் பேட்டி.!

ஆனால், பிசிசிஐ அவருக்கு வாழ்நாள் தடை விதித்தது. இதை எதிர்த்து கோர்ட்டில் முறையிட்டார்.

விசாரணை அதிகாரியாக முன்னாள் நீதிபதி டிகே ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஸ்ரீசாந்துக்கு வழங்கப்பட்ட வாழ்நாள் தடையை 7 வருடங்களாக குறைத்தார்.

ஸ்ரீசாந்துக்கு 2013-ல் இருந்து விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதத்துடன் அவர் மீதான தடை முடிவடைகிறது. அதன்பின் அவர் விளையாடலாம்.

ஆனால், ஸ்ரீசாந்திக்கு இப்பொழுது வயது அதிகமாகி இருபதால் தொடர்ந்து விளையாடுவாரா என்பது சந்தேகம்.