இனியாவின் ஆசையை நிறைவேற்றியே எழில், வார்னிங் கொடுத்த ஆகாஷ் அப்பா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
இனியாவின் ஆசையை எழில் நிறைவேற்ற, பாக்கியாவின் வீட்டுக்கு வந்து ஆகாஷ் அப்பா வார்னிங் கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் எழில் உட்கார்ந்து கொண்டிருக்க இனியா வருகிறார் காலேஜ் போகலயா என்று கேட்க ஸ்டடி ஹாலிடே என்று சொல்லுகிறார். எழில் ஓ அப்படியா என்று சொல்லிவிட்டு போனை பார்த்துக் கொண்டிருக்க அதில் ஆகாஷ் எழுதப்போகும் எக்ஸாம்க்கான நியூஸ் வர அதனைப் பார்த்து இனியா எப்படி இதை மறந்தேன் என்று சொல்லி எழிலிடம் போன் கேட்கிறார். எதற்கு என்று எழில் கேட்க ஆகாஷிற்கு ஃபோன் பண்ண வேண்டும் என்று சொல்லுகிறார்.
எழில் அமைதியாக இருக்க சரி வேணா விடு அண்ணா என்று சொல்லிவிட்டு பூஜை ரூமுக்கு சென்று ஆகாஷ் நல்லபடியாக இந்த எக்ஸாம் எழுதணும் இதுக்காக தான் கஷ்டப்பட்டான் என வேண்டிக் கொள்கிறார். உடனே இனியா ரூமுக்கு போக எழில் கூப்பிட்ட நான் உனக்கு போன் குடுக்கலன்னு வருத்தமா என்று கேட்க அப்படியெல்லாம் ஒன்னும் இல்லன்னு நான் அம்மாவுக்கு சத்தியம் பண்ணி கொடுத்திருக்க என்று சொல்ல அப்ப எப்படி போன் கேட்ட என்று சொல்லுகிறார். விஷ் பண்றதுக்காக மட்டும்தான் கேட்டேன் என்று சொல்ல சரிவா நம்ப வெளிய போகலாம் என்று கூப்பிடுகிறார்.
எங்க போறோம் என்று இனியா கேட்க சொல்றேன் என அழைத்து செல்கிறார். பிறகு ஆகாஷ் வீட்டிற்கு அழைத்துச் செல்ல இங்கு எதுக்கு நான் கூட்டிட்டு வந்த அம்மாகிட்ட பார்க்க மாட்டேன் பேச மாட்டேன்னு சொல்லி இருக்கேன் என்று சொல்ல, அவனுக்கு விஷ் பண்ணனும்னு தானே ஆசைப்பட்ட வா போய் பண்ணிட்டு வரலாம் என்று சொல்ல முதலில் நீங்கள் உன்னை பார்த்த உடனே பதறிடுவான் நான் போய் பேசிட்டு உன்னை கூப்பிடறேன் என சொல்லி உள்ளே வர ஆகாஷ் புக்ஸ்களை எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரம் பார்த்து எழில் வர என்ன ஆகாஷ் என்ன பண்ணிக்கிட்டு இருக்க நல்லா ப்ரிப்பேர் பண்ணி இருக்கியா நல்லா எழுது ஆல் தி பெஸ்ட் என்று சொல்லிவிட்டு இனியாவும் உனக்கு விஷ் பண்ண தான் சொன்னா என்று சொல்ல தேங்க்ஸ் சொல்லிடுங்க என்று சொல்லுகிறார் அதை நீயே சொல்லிடு அவ நேர்ல தான் வந்து விஷ் பண்ணனும் சொல்லி இருக்கா என்று சொல்லி இனி அவை கூப்பிடுகிறார்.
பிறகு இனியா உள்ளே வந்து நிற்க ஆகாஷ் கண்கலங்க இனியும் ஆகாசுக்கு அடிபட்டிருப்பதை பார்த்து கண்கலங்குகிறார். உடம்பு எப்படி இருக்கு என்று கேட்க நல்லா இருக்கு பரவால்ல என்று சொல்லுகிறார் நல்லா எக்ஸாம் எழுது ஆல் தி பெஸ்ட் என்று சொல்ல தேங்க்ஸ் சொல்லுகிறார் ஆகாஷ். சரி நான் வெளியே இருக்கேன் என்று சொல்லி இனியா வெளியே இருக்க கொஞ்ச நேரத்தில் அப்பா வந்து நீ எதுக்கு இங்க இருக்க என்று பேசுவதை கேட்டு எழில் மற்றும் ஆகாஷ் இருவரும் வெளியே வருகின்றனர் நீயும் வந்து இருக்கியா எதுக்கு வந்திருக்கீங்க உங்க பின்னாடியே உங்க அப்பாவும் அண்ணனும் வருவாங்களா என் பையன திருப்பி அடிக்க போறீங்களா என்று கேட்க அதுக்கெல்லாம் நாங்க வரல அவன் எக்ஸாம் எழுதுறதுக்கு ஆல் தி பெஸ்ட் சொல்ல தான் வந்தோம் என்று சொல்ல அடிச்சதெல்லாம் அடிச்சிட்டு இதுல வேற ஆல் தி பெஸ்ட் வேறயா என்று கோபப்படுகிறார். உடனே ஆகாஷ் அவரது அப்பாவை சமாதானப்படுத்தி நீங்க கிளம்புங்க என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.
செல்வி ரெஸ்டாரண்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்க பாக்கியா செல்வியை கூப்பிட்டு இன்னைக்கு ஆகாஷ் எக்ஸாம் ஆச்சு நீ வீட்ல இருந்திருக்கலாம்ல இல்லக்கா அங்க இருந்தா அவனை பார்த்துட்டு இருக்கான் நான் ஏதாவது சொல்லி அனுப்பு மனசு கஷ்டப்படக்கூடாது இல்ல அதனால தான் வந்துட்டேன் என்று சொல்லி பேசிக் கொண்டிருக்கிறார் அதெல்லாம் நீ எதுவும் கவலைப்படாத ஆகாஷ் நல்லா படிச்சிருப்பான் அவன் நல்லா எழுதுவான் எனக்கு தெரியும் என்று சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து ஏழில் மற்றும் இனியா இருவரும் வருகின்றனர். எழில் உன்கிட்ட ஒரு விஷயம் பேசணுமா என்று சொல்ல என்ன விஷயம் என்று கேட்கிறார்.
நாங்க இப்போ ஆகாஷ பாத்துட்டு வந்தோம் என்று சொல்ல பாக்கியா எதற்கு என்று கேட்க இனியா விஷ் பண்ணனும்னு சொன்னா போன்ல பண்ணனும்னு தான் கேட்டா ஆனா நான் தான் நேர்ல கூட்டிட்டு போய் விஷ் பண்ணிட்டு வந்தேன் என்று சொல்ல, இனியா சாரி சொல்லுகிறார் அதற்கு பாக்யா இதுக்கு எதுக்கு சாரி சொல்ற விஷ் தான பண்ண விடு என்று சொல்லி எனக்காக ஹெல்ப் பண்ணு என சொல்லிவிட்டு எழிலிடம் இந்த ரெஸ்டாரண்டுக்கு ஒரு ஆட் எடுக்கணும் அதனால என்ன பண்றதுன்னு பாரு என்று சொல்லுகிறார்
ஆகாஷ் அப்பா பாக்கியா வீட்டுக்கு வந்து சத்தம் போட கோபி என்ன சொல்லுகிறார்? அதற்கு ஆகாஷ் அப்பாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
