உடல் நலக்குறைவால் பிரபல கராத்தே பயிற்சியாளர் மற்றும் நடிகர் ஷிகான் ஹுசைனி காலமானார்..!
உடல் நலக்குறைவால் பிரபல கராத்தே பயிற்சியாளரும் நடிகருமான ஹுசைனி காலமாகியுள்ளார்.

விஜய் நடிப்பில் வெளியான பத்ரி படத்தின் மூலம் பிரபலமானவர் கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி. அதனைத் தொடர்ந்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் மருத்துவமனையில் 22 நாட்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
சிகிச்சை பலனின்றி நள்ளிரவு உயிரிழந்துள்ளார். இவருடைய மரணம் திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
