அண்ணாமலை கேட்ட கேள்வி, ரோகினியை வெளுத்து வாங்கிய விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!
அண்ணாமலை ரோகினியிடம் கேள்வி மேல் கேள்வி கேட்க விஜயா வெளுத்து வாங்கியுள்ளார்.

தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் முத்துவிடம் இப்ப எதுக்கு லூசு மாதிரி இரண்டு பேரும் பேசிகிட்டு இருக்கீங்க என்று கேட்க அதற்கு முத்து லூசு நாங்க இல்ல நீ தான் உன்ன லூசு ஆக்குனது உன்னோட பொண்டாட்டி பார்லர் அம்மா என்று சொல்லுகிறார். உடனே முத்து ஐயா இப்பயாவது நடந்த உண்மை எல்லாத்தையும் சொல்லுங்க என்று சொல்லுகிறார்.
உடனே பிரவுன் மணி நான் ரோகிணி ஓட மாமா கிடையாது நான் கறிக்கடை தான் வச்சிருக்கேன் நடிக்கறதுக்காக ஆசைப்பட்டு வித்யா வந்து என்கிட்ட கேட்டதுனால நான் ஒத்துக்கிட்டேன் இந்த பொண்ணு என் வாழ்க்கை இக்கட்டான சூழ்நிலைல இருக்கு நீங்க தான் காப்பாத்தணும் கெஞ்சிச்சு நான் காசுக்காக இதை பண்ணல என்று சொல்லி அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறார் ஆனால் இதெல்லாம் கேட்டு விஜயா அதிர்ச்சியில் உறைந்து போய் உட்கார்ந்து இருக்க அண்ணாமலை நீங்க போய் இப்படி பண்ணலாமா என்று கேட்கிறார். நான் காசுக்காக இதை பண்ணல அந்த பொண்ணு கெஞ்சி கேட்டதால தான் செய்தேன் என்று சொல்லி மீண்டும் மன்னிப்பு கேட்டுவிட்டேன் ரோகினி இடம் வருகிறார்.
உண்மையை சொல்லிட்டா வலி கொஞ்ச நேரம் தான் ஆனா பொய்ய சொல்லிடாத வாழ்நாள் ஃபுல்லா காப்பாத்தணும் என்று ரோகினிக்கு அட்வைஸ் கொடுத்து விட்டு சென்று விடுகிறார். அதற்கு முத்து இவ்வளவு நாளா நம்ம தலையில் எல்லாம் மிளகாய் அரைச்சிட்டு ஏமாத்திகிட்டு இருந்திருக்கு என்று சொல்ல அண்ணாமலை உடனே ரோகினி இடம் வந்து உனக்கு என்ன பிரச்சனை உன்னை இந்த வீட்டில ஒரு பொண்ணா தானே பார்த்தோம் அதுவும் விஜயா உனக்கு எவ்வளவு சப்போர்ட் பண்ணிக்கிட்டு இருந்தா உனக்கு எங்கள எல்லாம் ஏமாத்த எப்படி மனசு வந்தது.
முத்து மட்டும் இதை கண்டுபிடிக்காம இருந்திருந்தா கடைசி வரைக்கும் எங்களை ஏமாத்திட்டு தானே இருந்திருப்ப நீ என்று கோபப்பட்டு கேள்வி மேல் கேள்வி கேட்கிறார் ரோகினி அப்படியெல்லாம் இல்ல அங்கிள் என்று அழுது கொண்டே சொல்ல, அதற்கு அண்ணாமலை ஏற்கனவே பண விஷயத்துல தப்பு பண்ணீங்க அதுவே பெரிய தப்புன்னு நினைச்சா அதெல்லாம் ஒரு தப்பே இல்லை என்ற மாதிரியே தப்பு மேல தப்பா பண்ணிக்கிட்டு போற உனக்கு என்னதான் வேணும் எதுக்கு இதெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்க என்று கேட்கிறார். உடனே மனோஜிடம் வந்து உனக்கும் இதுல சம்பந்தம் இருக்கா என்று கேட்க எனக்கே ஒன்னும் புரியலபா என்ன நடக்குதுன்னு நானே புரியாமல் பார்த்துக்கொண்டு இருக்கிறேன் நான் யார் கூட வாழறேன் என்று தெரியவில்லை என்று சொல்ல ரோகிணி அதிர்ச்சி அடைகிறார்.
உடனே அண்ணாமலை ரோகினியிடம் வந்து நீ என்ன சொன்னாலும் நாங்க நம்பிடுவோம்னு இப்படி பண்றியா இப்பயாச்சும் சொல்லு உனக்கு என்ன பிரச்சனை எதுக்காக அப்படி பொய் மேல பொய் சொல்லிக்கிட்டு இருக்க என்று கேட்க ரோகினி பேச வர உடனே விஜயா நிறுத்துடி என்று அதட்டுகிறார். யாருடி நீ வாய தொறந்தாலே உனக்கு பொய் மட்டும் தான் வருமா என்று தள்ளி விடுகிறார். அண்ணாமலை பொறுமையா பேசு விஜயா என்று சொல்லுகிறார். இதுக்கு மேல என்ன பொறுமையா பேச சொல்றீங்க எவ்வளவு பொய் எவ்வளவு பித்தலாட்டம் உன்ன நான் பாத்து கட்டிட்டு வந்த மருமகன்னு எவ்வளவு பெருமையா சொல்லிக்கிட்டு இருந்தா தெரியுமா என்ன நம்ப வச்சு கழுத்தறுத்திட்ட இல்ல என்று சொல்ல, எவனோ ஒரு கறிக்கடைக்காரன மாமனு சொல்லி நான் அவனுக்கு கூட கும்பிடலாம் போட்டு பணிவிடை செஞ்ச. இப்ப நெனச்சா கூட எனக்கு உடம்பெல்லாம் கூசுது என்று சொல்ல
,ரோகினி பேச வர உடனே எதிர்த்து பேசாத என்று கன்னத்தில் அடித்துக்கொண்டே போகிறார்.
உடனே முத்து தலையில் தூக்கி வைத்து ஆடுனீங்க இல்ல அதனால தான் கால்ல மிதிச்சி இருக்காங்க என்று சொல்ல கேட்டியா என்ன சொன்னான்னு கேட்டியா இப்ப இவகேட்பாயா? கேட்பதில் என்ன தப்பு இருக்கு உன்ன அப்படித்தானே வெச்சிருந்தனா திருப்பி அவகேப்பா எல்லாருக்கும் நான் தான் பதில் சொல்லணும் இந்த ஊர் கேட்டாலும் நான் தான் பதில் சொல்லணும் ஏன்னா உன்னை நான் பார்த்து கட்டிட்டு வந்தேன் என்று சொல்லி கோபத்தில் ரூமில் இருக்கும் பொருட்களை தூக்கி வீச ரோகினியின் ஹேண்ட்பேகை ஹாலில் தூக்கி விசிறி அடிக்கிறார். விஜயா என்ன பேசுகிறார்? அதற்கு ரோகிணியின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
