சுரேகாவை அறைத்த சுந்தரவல்லி, பயத்தில் நந்தினி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லோகேஷன் அமைந்துள்ளது.

Moondru Mudichu Serial Today Promo Update 25-03-25
Moondru Mudichu Serial Today Promo Update 25-03-25

நேற்றைய எபிசோடில் அருணாச்சலமும் சூர்யாவும் பேசிக்கொண்டிருக்க கிச்சனின் வரும் வாசனையே முகர்ந்து சூப்பர் வாசனை வருது என்று சொல்ல, நம்ம கிச்சன்ல இருந்து சூப்பரா வாசனை வருதுனா உன் பொண்டாட்டி தான் எதையாவது செய்வா என்று சொல்ல இருவரும் கிச்சனுக்கு வருகின்றனர். என்னம்மா செய்ற வாசன தூக்குது என்று அருணாச்சலம் கேட்கிறார். இது என்னன்னு உங்களுக்கும் தெரியலையா என்று சொல்ல கேசரி மாதிரி இருக்கு அல்வா மாதிரியும் இருக்கு என்று சொல்லுகிறார் அதற்கு சூர்யா நீங்க இதுக்கு பேர் எல்லாம் அப்புறம் வச்சுக்கோங்க எனக்கு கொடு நந்தினி என்று சொல்ல கல்யாணம் உங்களுக்கு இல்லாததா என்று அப்படியே தூக்கிக் கொடுக்கப் போக வைங்க அண்ணே இது சுரேகா அம்மாவோட பிறந்தநாள்க்கு வரவங்களுக்காக என்று சொல்ல அப்போ எனக்கு கிடையாதா என்று கேட்க உங்களுக்கு இல்லாமயா சார் என்று வாழை இலையில் ஸ்வீட் வைத்து அத்துடன் கொஞ்சம் மிக்சர் வைத்து கொடுக்கிறார்.

மூன்று பேரும் சாப்பிட்டுவிட்டு நந்தினியை பாராட்டி தள்ளுகின்றனர் வாயில வச்ச உடனே உள்ள போயிடுது என்று சொல்ல அருணாச்சலம் ஒரு வாய்க்கு ஒரு ஏக்கர் சொத்து எழுதி கொடுக்கலாமா அவ்வளவு சூப்பரா இருக்கு என்று சொல்லுகிறார். இதுல ஏதோ ஒரு மேஜிக் இருக்கு நந்தினி. இந்த டேஸ்ட்ல நான் சாப்பிட்டதே இல்லை என்று சூர்யா ரசித்து ருசித்து சாப்பிடுகிறார். இதுக்கு பேரு அசோகா அல்வா என்று சொல்ல, அருணாச்சலம் சூப்பரா இருக்கு என்று சொல்லுகிறார். சூர்யா மீண்டும் கேட்க எல்லாருக்கும் கொடுக்கும்போது நீங்க சாப்பிடுங்க என்று சொல்லுகிறார்.

மறுபக்கம் அர்ஜூன் சுரேகாவிடம் பேசிக்கொண்டிருக்க உங்க ஏரியால மட்டும் இன்னைக்கு பௌர்ணமியா என்று கேட்க இல்லை இருட்டாதான் இருக்கு என்று சொல்லுகிறார் உடனே அர்ஜுன் கண்ணாடியை போய் பார் என்று சொல்ல இன்னுமா இந்த டயலாக் எல்லாம் பேசிக்கிட்டு இருக்க என்று சொல்லி கிண்டல் பண்ண, நான் உன்னை உடனே பார்க்க வேண்டும் என்று சொல்ல, சரி ஃபங்ஷனுக்குவா எல்லார்கிட்டயும் அறிமுகம் பண்றேன் என்று சொல்ல அப்படி எல்லாம் இல்ல நான் தனியா வந்து பாக்கணும் என்று சொல்லுகிறார். யாராவது பார்த்தா பிரச்சனை ஆயிடும் என்று சுரேகா சொல்ல அதெல்லாம் எனக்கு தெரியாது நான் கிப்ட் கொடுத்த உடனே தான் நீ கேக் கட் பண்ணனும் நீ ரூம்குள்ள இரு நான் வந்து விடுவேன் என போனை வைக்கிறார்.

அர்ச்சனா ரேணுகாவிற்கு ஃபோன் போட்டுக் கொண்டே இருக்க, ரேணுகா எடுத்து பேசுகிறார். எல்லாரும் நிறைய பேர் வந்திருக்காங்க கொஞ்சம் வேலையா இருக்கு என்று சொல்ல அப்படியே நான் சொல்ற வேலையும் சேர்த்து பண்ண என்று ரேணுகாவிடம் ஒரு விஷயத்தை சொல்ல நான் வேலையை முடிச்சிட்டு பண்றேம்மா என்ன போனை வைக்கிறார். மறுபக்கம் சுந்தரவல்லி பார்ட்டியில் ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்க சுந்தரவள்ளி தோழி ஹேமாவும் அவரது மகனும் வர சுரேகாவை கூப்பிட்டு அறிமுகம் செய்து வைக்கிறார். உடனே சுரேகா அங்கிருந்து வந்து அம்மா என்ன வாண்டடா பேச சொல்றாங்க என்று சொல்ல மாதவி ஒருவேளை அந்த பையனுக்கு உன்னை கல்யாணம் பண்ணி வைப்பாங்களோ என்னமோ என்று சொல்ல எனக்கு அவனை பிடிக்கலை என்று சொல்லிவிடுகிறார்.

சுந்தரவல்லி தோழி ஸ்வீட் சாப்பிட்டுவிட்டு சூப்பரா இருக்கு என்று சொல்ல, சூர்யா என் வைஃப் சூப்பரா சமைப்பா என்று சொல்லுகிறார். ஹேமா அவரது மகனை போய் நீ சுரேகா கிட்ட பேசு என்று அனுப்பி வைக்க உடனே சுரேகா ரூம்ல என்னோட பிரண்ட்ஸ் இருக்காங்க அவங்கள அனுப்பிட்டு நான் வரேன் என்று நைசாக ரூமுக்கு வருகிறார். பிறகு பிரண்ட்ஸ்களுடன் பேசிக் கொண்டிருக்க அர்ஜூன் சுவர் எகிறி குதித்து வீட்டுக்குள் வருகிறார். அதனை நந்தினி பார்த்துவிட, அதற்குள் அர்ஜூன் சுரேகாவுக்கு போன் பண்ணி நான் உங்க வீட்டோட கார்டன்ல இருக்கேன் சீக்கிரம் கதவ தொற என்று சொல்ல சுரேகா ஃப்ரண்ட்சை வெளியில் அனுப்பிவிட்டு கதவை திறந்து உள்ளே வா என்று சொல்ல ரேணுகா பார்த்து விட்டு என்னம்மா என்று கேட்கிறார்.

என் பிரண்டு தான் போ மிரட்டி அனுப்பி விடுகிறார். உடனே நந்தினி ரேணுகாவிடம் வந்து இங்க ஒருத்தன் வந்தானே பார்த்தியா என்று கேட்க என்ன சொல்றீங்க என்று கேட்டுவிட்டு கோர்ட் போட்டுட்டு 21 வயசு இருக்குமா என்று கேட்க, இப்பதான் சுரேகா அம்மா ரூமுக்குள்ள போய் இருக்கான் என்று சொல்ல உடனே நந்தினி பின்கதவை பூட்டிவிட்டு ஓடிவிட ரூமுக்குள் அர்ஜுன் சுரேகாவிற்கு கிப்ட் கொடுத்து படிக்க சொல்ல சுரேகா படிக்க உட்கார்ந்தவுடன் வைர மோதிரம் கிப்ட் கொடுக்கிறார். இந்த ஒரு நாளுக்காக தான் நான் இத்தனை வருஷம் காத்துக்கிட்டு இருந்தேன். நீ மட்டும் என்ன லவ் பண்ணி இருந்தா மூணு வருஷம் ஜாலியா சுத்திருக்கலாம் என்று சொல்ல, உடனே சுரேகா என்ன உனக்கு அவ்வளவு பிடிக்குமா என்று கேட்க எனக்கு உன்னை மட்டும் தான் பிடிக்கும் நீதான் எனக்கு உயிர் என்று சொல்லிவிட்டு மீண்டும் காதலை சொல்ல சுரேகாவும் பதிலுக்கு ஐ லவ் யூ என்று சொல்லுகிறார். மறுபக்கம் கேக் வெட்ட ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்க சுந்தரவல்லி மாதவியிடம் சுரேகாவை போய் கூட்டிட்டு வா என்று அனுப்ப அந்த நேரம் பார்த்து நந்தினி பதறிக் கொண்டு ஓடி வந்து வீட்டுக்குள்ள திருடன் வந்திருக்கான் என்று சொல்லுகிறார்.

என்னம்மா சொல்ற என்று அருணாச்சலம் கேட்க அவன் சுரேகாம்மா ரூம் பக்கமா போனா அவனை உள்ள வெச்சு பூட்டிட்டேன். நம்ம இந்த பக்கம் போனா புடிச்சிடலாம் என்று சொல்ல குடும்பத்தினர் அனைவரும் உள்ளே ஓடி வருகின்றனர். ரூமுக்குள் இருவரும் பேசிக் கொண்டிருக்கிற, அர்ஜூன் உங்க வீட்ல எல்லாரும் டெரர் பீசா இருப்பாங்க போலயே என்று கேட்க அம்மா மட்டும்தான் நான் பாத்துக்குறேன் என்று சொல்லுகிறார். சூர்யா மற்றும் அருணாச்சலம் இருவரும் கதவை திற என்று கதவை தட்டுகின்றனர். நீ முதல்ல இங்க இருந்து போ என்று சொல்ல உடனே பின் கதவை பார்க்க அங்கு பூட்டி இருப்பதால் உள்ளே என்ன செய்வது என தெரியாமல் இருவரும் பதற்றத்தில் இருக்கின்றனர். எல்லாரும் வெளியே இருக்கும்போது திருடன் எப்படி உள்ள இருப்பான் என்று சொல்ல நந்தினி அவன் எதிரி குதிச்சு வந்ததை நான் பார்த்தேன் என்று சொல்ல சுந்தரவல்லி அப்ப சுரேகா எங்க போயிருப்பா என்று கேட்கிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் சுந்தரவல்லி சுரேகாவிடம் நான் உன்னை எவ்வளவு நம்பினேன் என்கிட்டயே நடிக்கிறியா என்று கன்னத்தில் அறைகிறார். உடனே நந்தினி நம்ம வேற திருடனு சொல்லி மாட்டி விட்டுட்டோமே இதனால என்ன பிரச்சனை வரப்போகுதுன்னு தெரியலையே என்று மனதில் நினைக்கிறார்.

இத்தனை வருஷமா இந்த வீட்ல எனக்கு நடக்காத அவமானம் உன்னால நடந்து இருக்கு என்று நந்தினியை பார்த்து சுரேகா திட்டுகிறார். என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu Serial Today Promo Update 25-03-25
Moondru Mudichu Serial Today Promo Update 25-03-25