Pushpa 2

கோபியை மிரட்டிய எழில், மிரண்டு போய் நின்ற கோபி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

உண்மை தெரிந்த எழில் கோபியை நேரில் சென்று மிரட்டியுள்ளார்.

தமிழ் சின்னத்திரை விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலை இன்றைய எபிசோடில் பாக்கியா பேசிவிட்டு போன பிறகு ராதிகா கோபி மீது கடும் கோபமாக பேசுகிறார். உங்கள கல்யாணம் பண்ணதே தப்புன்னு நான் நினைக்கிறேன் உங்ககிட்ட கேட்கிறதெல்லாம் என்ன என் கூட வாழுங்க உங்க முதல் பொண்டாட்டிய மறந்துட்டு இருங்கன்னு சொல்றது ஒரு குத்தமா அது உங்களால பண்ண முடியாதா, என் மூஞ்சிலேயே முழிக்காதீங்க என்ன தொடாதீங்க என்கிட்ட பேசாதீங்க என்று கோபப்பட்டு ராதிகா சென்றுவிட கோபியும் ஒன்றும் பேசாமல் இருந்து விடுகிறார். மறுபக்கம் எழில் ரெஸ்டாரண்ட்க்கு வர ஈஸ்வரி உட்கார்ந்து கொண்டிருக்கிறார். செல்வி எழிலை பார்த்தவுடன் முகம் சுழிக்க, எப்படி இருக்கீங்க பாட்டி ஏதோ கேட்க நல்லா இருக்கையில் உட்காரு என்று சொல்லுகிறார்.

BaakiyaLakshmi Serial Today Episode Update
BaakiyaLakshmi Serial Today Episode Update

அம்மா இல்லையா பாட்டி என்று கேட்க வெளியே போயிருக்கா வருவா என்று சொல்லுகிறார் உன் போன் பண்ணி பாத்தியா அப்பா என்று கேட்க வரும் போது வரட்டும் பாட்டி என்று சொல்ல, பாக்யா மேல உனக்கு இன்னும் கோவம் போகலையா என்று கேட்க எனக்கு என்ன கோபம் பாட்டி என்று கேட்கிறார். என்னதான் இருந்தாலும் அவ உன்னோட பட பூஜைக்கு வரணும்னு எதிர்பார்த்து இருப்ப இல்ல அவளால வர முடியலப்பா இங்க வேலை அப்படி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். ஈஸ்வரி எழிலும் பேசிக் கொண்டிருக்க பக்ரீத் ஆர்டரில் நடந்த விஷயம் குறித்து எழிலிடம் சொல்லுகிறார். கோபி தான் எல்லாத்துக்கும் காரணம் என்று சொல்ல எழில் கோபமாகி கோபியை பார்க்க ரெஸ்டாரன்ட் வருகிறார்.

கோபி எதுவும் தெரியாதது போல் நலம் விசாரிக்க எழில் டென்ஷன் ஆகி எதுக்கு இப்படி எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்க நான் என்ன பண்ண நான் எதுவுமே பண்ணலையே என்று சொல்ல என்கிட்ட படபூஜா அப்போ என்ன சொன்னீங்க உங்க அம்மா எனக்கு எவ்வளவு பண்ணி இருக்கா அதுக்கு பதில் நான் இது கூட பண்ண கூடாதான்னு கேட்டீங்க இதை மட்டும் தானா பண்ணி இருக்கிறீங்கலா என்று கோபப்படுகிறார். மேலும் உடனே கோபி அப்போ உங்க அம்மா பண்ணதெல்லாம் தப்பா தெரியலையா என்று கேட்க எங்க அம்மா எந்த தப்பும் பண்ணல என்று சொல்ல உடனே டென்ஷனான கோபி எங்க அப்பாவோட சடங்கு என்று ஆரம்பிக்க போதும் நிறுத்துங்க உங்க அப்பாக்கு உங்க மேல இருக்கிற வெறுப்புனால இறுதி சடங்கு செய்யக்கூடாதுன்னு சொன்னாரு. அதை அவங்க பொண்டாட்டி கிட்ட என்னோட கடைசி ஆசை என்று சொல்லும்போது அது அவங்க நிறைவேற்றி வச்சிருக்காங்க அவ்வளவுதான் இதெல்லாம் நீங்க எங்க அம்மாவ பழிவாங்குறதுக்கு எதுவுமே கிடையாது என்று பேசுகிறார். நான் தானே உனக்கு வேலை வாங்கி கொடுத்தேன் என்று சொல்ல அந்த வேலை அது எனக்கு தேவையில்லை இப்பவே நான் ப்ரொடியூசர் கிட்ட பேசுகிறேன் என்று சொல்ல ஏதாவது கோர்ட்டு கேஸ் ஆயிடும் என்று கோபி மிரட்ட எது ஆனாலும் நான் பாத்துக்குறேன் என்று சொல்லுகிறார். ஆனா உன்னை இந்த விஷயத்துல எங்க அம்மா உங்களை ஏதாவது பண்ணுவாங்க ஆனா அவங்க பரிதாபப்பட்டு பண்ணாம விட்டால் நான் உங்களை சும்மா விடமாட்டேன் என்று கண் முன்னே நின்று மிரட்ட கோபி மிரண்டு நிற்கிறார். மறுபக்கம் பாக்யா செல்வியுடன் போலீஸ் ஸ்டேஷனில் நின்று கொண்டிருக்க செப் வந்தவுடன் கம்பளைண்ட் கொடுத்து விடலாம் என்று சொல்ல ஆனந்த் வருகிறார். மூவரும் கம்ப்ளைன்ட் கொடுக்க உள்ளே செல்கின்றனர். நடந்த விஷயங்களை போலீஸிடம் சொல்லி பாக்யா கம்ப்ளைன்ட் எழுதி கொடுக்க ஆனந்த் வாக்குமூலம் கொடுக்கிறார். சரி நீங்க கிளம்புங்க நான் பாத்துக்குறேன் என்று சொல்லி ஆனந்தை மட்டும் நிறுத்தி வைக்க விசாரிக்கணும் என்று சொல்லுகிறார்.

வீட்டுக்கு வந்த கோபி ராதிகாவிடம் என்ன பேசப் போகிறார்?அதற்கு ராதிகா என்ன பதில் சொல்லப் போகிறார்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

BaakiyaLakshmi Serial Today Episode Update
BaakiyaLakshmi Serial Today Episode Update