கோபியிடம் காலில் விழுந்து கெஞ்சிய எழில், நடக்கப்போவது என்ன? இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!
கோபியின் காலில் விழுந்து கெஞ்சி உள்ளார் எழில்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ப்ரொடியூசர் எழிலை சந்தித்து இந்த படம் பூஜை நடக்கணும்னா உங்க அம்மா இந்த பங்ஷன்ல கலந்துக்க கூடாது என்று சொல்ல எழில் அதிர்ச்சி அடைகிறார்.அப்போ அது எப்படி சார் முடியும் என்று கேட்க சொல்ல அந்த நேரம் பார்த்து கோபி உள்ளே வந்து ஆரம்பத்திலிருந்து நடந்த விஷயங்களை சொல்லி இதற்குப் பின் இருப்பது நான்தான் என்ற உண்மையையும் சொல்லி உங்க அம்மா வரக்கூடாது என்று சொல்லுகிறார். இதனால் மனமுடைந்த எழில் இவ்வளவு நாள் கஷ்டப்பட்டது எங்க அம்மா தான் ஆனா அவங்களை எப்படி சார் நான் வர வேணாம்னு சொல்ல முடியும் என்று புரொடியூசர் இடம் கேட்க அவர் ஒரே முடிவாக உங்க அம்மா வந்தா பங்ஷன் நடக்காது என்று சொல்லிவிட்டு யோசிச்சு முடிவெடுங்க என்று சொல்லி கிளம்புகிறார். உடனே கோபி எல்லா நேரமும் எமோஷனலான எப்படி ஏதாவது ஒரு முடிவு எடுக்கணும் இல்ல என்று சொல்லி எழிலிடம் பேசிக் கொண்டிருக்கிறார். இந்த ஒரு முடிவை நீ எடுத்து தான் ஆகணும் என்று சொல்லிவிட்டு கோபி கிளம்புகிறார்.
பிறகு யோசித்த எழில் ப்ரொடியூசர் இடம் வந்து நான் நல்லா யோசிச்சுட்டேன் எங்க அம்மா இல்லாம இந்த பூஜை பண்ண எனக்கு விருப்பம் இல்லை நிறுத்திடுங்க என்று சொல்ல புரொடியூசர் எழிலை மிரட்டுகிறார் நீ எனக்கு கையெழுத்து போட்டு கொடுத்திருக்க கண்டிப்பா நீ இந்த படத்தை முடித்துக் கொடுக்கணும் இல்லன்னா போலீஸ் கேஸ்னு உன் லைஃபே க்ளோஸ் ஆயிடும் என்று சொல்ல எழில் ஒன்றும் புரியாமல் மொட்டை மாடியில் பாக்யா பேசியதெல்லாம் நினைத்து கண்கலங்கி நிற்கிறார்.
ராதிகா பங்ஷனுக்கு வர இனியா ஜெனியை நலம் விசாரிக்கிறார் பிறகு கோபி அவரை உள்ளே அழைத்துச் சொல்கிறார். உன்னை எப்படிமா நான் வரக்கூடாதுன்னு சொல்ல முடியும் என்று அழுகிறார்.
பிறகு மறுபடியும் ப்ரொடியூசரை சந்தித்து எழில் பேச அவர் எதுவா இருந்தாலும் உங்க அப்பா கிட்ட பேசிக்கோங்க என்று சொல்லி விடுகிறார். எழில் கோபியிடம் கெஞ்சு அழுது விழுந்து மன்னிப்பு கேட்டோம் கோபி உன்னோட நிலைமை எனக்கு புரியுது ஆனா என்னோட சூழ்நிலை புரிந்துகொள் என்று சொல்லிவிடுகிறார். உனக்குன்னு ஒரு பாதையை அமைத்துக் கொடுத்திருக்க அதுல போய் பொழச்சி பணம் சம்பாதிச்சு பெரிய ஆள் ஆகுற வேலையை பாரு எமோஷனல் இடியட் மாதிரி பண்ணி அப்புறம் உன் அம்மா பின்னாடி சோத்துக்கு தான் நிக்கணும் என்று சொல்லிவிட்டு கோபி சென்று விடுகிறார்.
எழில் எடுக்கப் போகும் முடிவு என்ன? பாக்யா இதை எப்படி தாங்கிக் கொள்ளப் போகிறார்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.