Pushpa 2

ஈஸ்வரியை மிரட்டி எடுக்கும் ராதிகா, பாக்யா சொன்ன பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

ஈஸ்வரி மிரட்டி எடுத்துள்ளார் ராதிகா.

BaakiyaLakshmi Serial Episode Update 06-01-25
BaakiyaLakshmi Serial Episode Update 06-01-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஜெனி கணக்கு வழக்கு பார்த்துக் கொண்டிருக்க ஆயுத பூஜை ஆர்டரில் நமக்கு லாபம் வந்திருக்க ஆன்ட்டி என்று சொல்ல அப்போ பொங்கல் ஆர்டர் பண்ணிடலாமா என்று கேட்க, பண்ணலாம் ஆனா சீக்கிரமா பண்ணுங்க என்று சொல்லுகிறார். உடனே ராதிகா என்ன ஆர்டர் என்று கேட்க உங்களுக்கு செய்யத் தெரியாத உங்களுக்கு இல்ல வேலைக்கு போறவங்களுக்கு பார்சல் பண்ணி கொடுக்கலான்னு இருக்கோம் என்று சொல்ல அந்த நேரம் பார்த்து ஈஸ்வரி வருகிறார்.

ராதிகா செய்த சமையல் குறித்து வம்பு இழுக்க நான் நல்லா தான் சமைக்கிறேன் கோபி பிடிக்கலைன்னு சொன்னாரா என்று கேட்க அவன் எப்படி சொல்லுவான் அவன் சாப்பிட்டது வெச்சே தெரிஞ்சுக்க வேண்டியது தான் அவனுக்கு இப்போ ஹெல்தியான சாப்பாடு தான் கொடுக்கணும் ஆனா நீ செய்வது அப்படி இல்ல என்று வாக்குவாதம் செய்கின்றனர். உடனே அங்கு கூட்டி வர என்ன விஷயம் எல்லோரும் ஒண்ணா இருக்கீங்க என்று கேட்கிறார் அதற்கு ராதிகா நான் சமைத்து சாப்பாடு நல்லா இருக்கா இல்லையா கோபி என்று கேட்கிறார். கோபி நல்லா தான் இருக்கும் என்று சொல்ல அவளுக்கு பயந்துகிட்டு சொல்லாதடா அம்மா இருக்கேன் நீ தைரியமா சொல்லு என்று சொல்லி இருவரும் ஆளுக்கு ஒரு பக்கம் இழுக்கின்றனர்.ஒரு கட்டத்திற்கு மேல் கோபி வேற வழி இல்லாமல் ராதிகாவோட சாப்பாடு நல்லா தான் இருக்கும் என்று சொல்லுகிறார் உடனே பாக்யாவிடம் ஈஸ்வரி நீ பார்த்த இல்ல பாக்கியம் எப்படி இருந்தது சாப்பாடு என்று கேட்க நான் பார்க்கல அத்தை என்று சொல்ல நீ இவளுக்கு சப்போர்ட் பண்றியா என்று கேட்கிறார்.

உடனே ராதிகா ஈஸ்வரியை தனியாக பேச வேண்டும் என்று அழைத்து உள்ளே சென்று, உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்க நீ இருக்கிறது புடிக்கல என்று ஈஸ்வரி சொல்ல, இனிமேல் அடுத்தவங்க குடும்ப விஷயத்துல தலையிடாதீங்க என்று சொல்ல கோபி எனக்கு அடுத்தவனா என்று கோபப்பட உடனே ராதிகா நீங்க சொல்றதெல்லாம் கேட்டுட்டு தலையாட்டுவதற்கு நான் ஒன்னும் பாக்யா கிடையாது ராதிகா என்று கையை நீட்டி மிரட்டுகிறார். ஈஸ்வரி அதிர்ந்து போய் நிற்க அந்த நேரம் பார்த்து உள்ள கோபி வருகிறார். என்னாச்சு ராதிகா அப்போ கூட்டிட்டு வந்த அம்மாவை என்ன பேசிக்கிட்டு இருந்தீங்க என்று கேட்க உங்க ஹாஸ்பிடல் ஃபைல் எங்க வச்சிருக்காங்கன்னு கேட்டேன் அதை மறந்துட்டேன்னு சொன்னாங்க வயசாயிடுச்சு இல்ல என்று அப்படியே மாற்றி பேச ஈஸ்வரி இன்னும் அதிர்ச்சி அடைகிறார். உடனே அங்கிருந்து ஈஸ்வரியை முறைத்துக் கொண்டே ராதிகா சென்று விடுகிறார்.

பிறகு கோபிக்கு ராதிகா மாத்திரை கொடுத்து கொண்டு இருக்க உன் அம்மாவ எதுவும் பேச வேண்டாம்னு சொல்லுங்க இப்போ பிரச்சனை பண்ண மாதிரி பண்ண கூடாதுன்னு சொல்லுங்க என்று சொல்ல சாப்பாட்டுக்கு சொன்னாங்களே அதுவா என்று கேட்க அதுல நூல் புடிச்சு இதுக்கு அப்புறம் எல்லா பிரச்சனையும் பண்ணுவாங்க நீங்க இங்க வரும்போது என்ன சொன்னீங்க எங்க அம்மாவால எந்த பிரச்சினையும் வராது என்று தானே சொன்னீங்க என்று சொல்லுகிறார். நீங்க அவங்க கிட்ட பேசுங்க என்று சொல்ல கோபி படபடப்பாக மாறுகிறார் உடனே அவரைச் சார்பிலும் உட்கார வைத்து மசாஜ் செய்து கொண்டே ராதிகா பேசிக் கொண்டிருக்கிறார்.

ஒருத்தவங்க கூட அதிகமா பழகும் போது அவங்களோட ஆக்டிவிட்டீஸ் அதிகமா இருக்கும்னு நான் ஒரு புக்ல படிச்சிருக்கேன் நீங்க உங்க அம்மா கூட அதிகம் சேரதுனால அவங்களுக்கு வர படபடப்பு உங்களுக்கு வந்துருச்சு என்று சொல்லுகிறார். நீயும்,மயூ இந்த வீட்டில சந்தோஷமா இருக்கணும் என்று சொல்லுகிறார். கிச்சனில் செல்வி வேலை பார்த்துக் கொண்டிருக்க பாக்கியா கணக்குகளை பார்த்துக் கொண்டிருக்கிறார். செல்வி எட்டி எட்டி பார்த்து வேலை பார்க்க இன்னும் என்ன பண்ணிக்கிட்டு இருக்க சீக்கிரமா வேலைய முடி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் பாக்யா. உள்ள கூட்டிட்டு போன பாக்கியா என்ன சொல்லி இருப்பாங்கன்னு யோசிச்சுக்கிட்டு இருக்க அக்கா என்று சொல்லுகிறார்.

அந்த நேரம் பார்த்து ஈஸ்வரி வந்து உட்கார ஈஸ்வரி என்ன சொல்லுகிறார்?அதற்கு பாக்யாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

BaakiyaLakshmi Serial Episode Update 06-01-25
BaakiyaLakshmi Serial Episode Update 06-01-25