ஓனரான அண்ணாமலை, அசிங்கப்பட்ட மனோஜ், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!
அண்ணாமலை ஓனராக, மனோஜ் அசிங்கப்பட்டுள்ளார்.
தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் மற்றும் ரோகினி ஷோரூமில் இருக்க ஸ்ருதி மற்றும் ரவி இருவரும் வருகின்றனர் என்ன விஷயம் என்று கேட்க முத்து வர சொன்னதாக சொல்ல என்னவாக இருக்கும் என்று இரண்டு பேரும் யோசித்துக்கொண்டிருக்க சுத்தி பார்த்துட்டு வரோம் என்று சொல்லி அவர்கள் கிளம்ப ரோகினி யோசித்துக் கொண்டே வெளியில் வர முத்து, அண்ணாமலை, விஜயா மற்றும் மீனா அனைவரும் வருகின்றனர்.
என்ன விஷயம் என்று மனோஜ் கேட்க அதுதான் எல்லாம் பேசி முடிவு பண்ணியாச்சு இல்ல இது அப்பாவோட பணம் தானே அப்பா தான் இனிமே ஓனர் நீ வேணும்னா மேனேஜரா இருந்துக்கோ என்று சொல்லி அந்த சீட்டில் இருந்து எழுந்துக்க சொல்லுகிறார். மனோஜ் எழுந்திருக்க தயங்க வலுக்கட்டாயமாக முத்து எழுந்திருக்க சொல்லுகிறார்.
பிறகு அண்ணாமலையை மற்றும் விஜயாவை கூப்பிட்டு நிக்க வைத்து முத்து அண்ணாமலைக்கும் மாலை போட மீனா விஜயாவுக்கு மாலை போடுகிறார். முத்து அவரை சீட்டில் உட்கார வைத்து லட்சணமா இருக்குப்பா என்று சொல்லுகிறார். உடனே அங்கு இருப்பவர்களுக்கு ஸ்வீட் கொடுத்து இனிமேல் அப்பா தான் ஓனர் மனோஜ் உங்கள மாதிரி ஒரு வேலை செய்ற ஆள் என்று சொல்ல மனோஜ் கடுப்பாகிறார். ஒரு கட்டத்திற்கு மேல் அங்கிருந்து கோபமாக செல்ல, சந்தோஷி சார் உள்ளே வருகிறார். அவர் வந்து குடும்பத்தோட இங்க இருக்கீங்க மாலையெல்லாம் போட்டு இருக்காங்க என்ன விசேஷம் என்று கேட்க அண்ணாமலை கோவிலுக்கு போயிட்டு வந்தோம் அப்படியே கடைக்கு வந்து ரொம்ப நாள் ஆகுதுன்னு பார்த்துட்டு போகலாம்னு வந்தோம் என்று சொல்லி சமாளிக்கிறார். உடனே மனோஜ் பணம் வாங்கிய டீலர்கள் கடையில் வந்து சத்தம் போடுகின்றனர். இதனால் சந்தோஷி மனோஜ் மலை எந்த பிரச்சினையும் இல்லை ப்ராடக்ட் வரதுக்கு கொஞ்சம் லேட் ஆயிடுச்சு என்று சொல்லி சமாளித்து அவர்களை அனுப்பி வைக்கிறார். உடனே மனோஜிடம் என்ன மனோஜ் டீலர் கிட்ட இருந்து காசு வாங்கி இருக்கீங்க ஆனா எனக்கு எதுவுமே அனுப்பலயே அனுப்பி இருந்தால் நான் ப்ராடக்ட்டா அனுப்பி இருப்பேனே என்று சொல்ல, அண்ணாமலை வீடு வாங்கிய விஷயத்தை சொல்ல ஆரம்பிக்க நான் சொல்றேன் பா என்று முத்து பொறுமையாக சொல்லுகிறார்.அவனை தேடிக்கிட்டு இருக்கோம் சார் கண்டிப்பா கண்டுபிடிச்சிடுவோம் என்று சொல்ல அதற்கு சந்தோஷி நீ இப்பதான் பிசினஸ் ஸ்டார்ட் பண்ணி இருக்கே நாங்க எல்லாம் பிசினஸ் ஸ்டார்ட் பண்ணி பத்து வருஷம் கழிச்சு தான் வீடு வாங்கணும் நீ பிசினஸ்ல வாங்கின காசு கொண்டு போயி வீடு வாங்கி இருக்க அதுவும் மூணு கோடி என்று மனோஜை திட்டுகிறார். இப்பவே வேற ஒருத்தரா இருந்தா டீலர்ஷிப் கேன்சல் பண்ணி இருப்ப முத்துகாக ஒரு உங்க அப்பாவுக்காக உண்டா விடுற என வார்னிங் கொடுத்துவிட்டு செல்கிறார்.
மறுபக்கம் வீட்டில் எல்லோரும் சோகமாக உட்கார்ந்து கொண்டிருக்க முத்து வீட்டுக்கு வந்து மனோஜிடம் நீ கடையில வேலை செய்யாம நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க என்று கேட்க விஜயா கடுப்பாகி போதும் நிறுத்துடா நீ பாட்டுக்கு உன் இஷ்டத்துக்கு பண்ணிக்கிட்டு இருக்க உன்னால தான் சந்தோஷி கிட்ட மனோஜ் அசிங்கப்பட்டா என்று சொல்லுகிறார். மனோஜ் திடீர்னு எப்படி சந்தோஷி சார் வருவாரு இவன்தான் வர சொல்லி இருப்பான் அப்பா ஓனர் ஆக்கி என்னை அசிங்கப்படுத்தறதுக்காக வர சொல்லி இருப்பான் என்று சொல்ல மீனா முத்துவிற்கு ஆதரவாக பேசுகிறார்.
அவர் அங்க வர வச்சு உங்கள் அசிங்கப்படுத்தனும்னு அவ்ளோ கேவலமா யோசிக்க மாட்டாரு, அவர் அந்த மாதிரி நினைக்கிற ஆளும் கிடையாது என்று சொல்ல உடனே ரோகினி என்னைக்குமே வராத ஆளு திடீர்னு வந்தாரு என்று கேள்வி கேட்க உடனே சுருதி அவர் தான் அப்பவே சொன்னாரு ஏதோ ஒரு வேலையா வந்தேன்னு அப்புறம் எப்படி முத்து காரணமா இருக்க முடியும். தேவையில்லாம வம்பு இழுத்தது உங்க ஹஸ்பண்ட் தான் என்று ரோகினிடம் சொல்லுகிறார். இது மட்டும் இல்லாம இப்போ பாக்கணும் இல்லன்னா டீலர்ஷிப்பை கேன்சல் பண்ணி இருப்பேன்னு சொன்னத கேட்டீங்க தானே என்று பேச இருவரும் எதுவும் பேசாமல் அமைதியாக நிற்கின்றனர். இன்னைக்கு மட்டும் இல்லாம அன்னைக்கும் எல்லாரும் பணக்காரங்கன்னு சொல்லி நடிக்கும் போது முத்து உண்மைய சொன்னதுனால தான் அவரு இந்த டீலர்ஷிப் கொடுத்தாலும் உங்களுக்கு தெரியும் என்று ஸ்ருதி சொல்ல எதுவும் பேச முடியாமல் நிற்கின்றனர்.
பிறகு அனைவரும் கிளம்ப மீனாவிடம் கோபமாக பேசிய விஜயா எல்லாத்துக்கும் காரணம் நாங்க தானே சொல்லுவீங்களா அடுத்து சென்னைக்கு புயல் வரப்போகுது அதுக்கு நான் தான் காரணமா என்று சொல்ல உன்கிட்ட எல்லாம் பேச்சு வாங்க வேண்டிய நேரம் எனக்கு என்று சொல்லுகிறார். உடனே அங்கிருந்து கோபமாக ரோகினியிடம் சென்று எல்லா பிரச்சனையும் உன்னால தான் நீ பணம் வாங்கின விஷயத்தை சொல்லி இருந்தேனா இவ்ளோ பிரச்சனை வந்திருக்காது எப்படியாவது 30 லட்சம் ரெடி பண்ணி கொடுக்க பாரு. இனிமே என்கிட்ட ஏதாவது மறச்சனா அவ்வளவுதான் என்று மிரட்ட, மனோஜ் ரூமுக்குள் போக வேலைக்குப் போக சொல்லி துரத்தி விடுகிறார்.
மறுபக்கம் மீனா கதிர் குறித்து முத்துவிடம் கேட்க முத்து என்ன சொல்லுகிறார்? அதற்கு மீனாவின் பதில் என்ன? ரோகினியும் மனோஜும் என்ன பேசுகின்றனர்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.