ஆகாஷ் வீட்டுக்கு போன கோபி, இனியா,..கண் கலங்கிய பாக்யா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

இனியாவுடன் ஆகாஷ் வீட்டுக்கு கோபி சென்று பேசியுள்ளார்.

baakiyalakshimi serial today episode update 08-04-25
baakiyalakshimi serial today episode update 08-04-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியாவும், அமிர்தாவும் ரெஸ்டாரண்டில் சோகமாக உட்கார்ந்து கொண்டிருக்க செல்வி ஏதோ புது டிஷ் சொல்லி இருக்க என்று கேட்க பாக்கியா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார் என்னாச்சு அமிர்தா என்று சொல்ல வீட்ல ஒரே பிரச்சனைக்கா என்று சொல்லுகிறார் என்ன பிரச்சனை சொல்லுக்கா என்று செல்வி பாக்யாவிடம் கேட்க எனக்கு ஒண்ணுமே புரியல செல்வி இனியாவை நினைச்சா எனக்கு ரொம்ப பயமா இருக்கு அவ கல்யாணம் வேணாம்னு சொல்லி எல்லார்கிட்டயும் சொல்றா ஆனா யாரும் கேட்க மாட்டாங்க அவ மனச மாத்திரத்திலேயே தான் இருக்காங்க அதுவும் இல்லாம ரெஸ்டாரன்ட் கேட்டு போனா ரெண்டு மூணு நாளிலேயே பொண்ணு கேட்க வராங்க எனக்கு ஏதோ ஒரு உறுத்தலா இருக்கு என்று சொல்ல அதெல்லாம் ஒன்னும் இல்லக்கா அப்படியெல்லாம் உங்க வீட்ல விசாரிக்காமல் கொடுத்திருக்க மாட்டாங்க அவர் பொண்ணு கேட்ட உடனே பையன் எப்படி என்ன ஏது என்று எல்லாம் விசாரிச்சு இருப்பாங்க என்று சொல்லியும் பாக்கியா சோகமாக இருக்க என் பையன பத்தி யோசிக்கிறியா அக்கா என்று கேட்கிறார்.

எப்படி செல்வி யோசிக்காம இருக்க முடியும் என்று கண்கலங்க கவலைப்படாதகா நீயும் என் பையன் பற்றி யோசிக்க வேணாம் இனியாவையும் யோசிக்க வேண்டாம் என்று சொல்லு. இனியா பாப்பாக்கு நல்ல வாழ்க்கை வந்து நல்லா இருக்கும் நீ அவனுக்காக நிறைய யோசிச்சிட்ட அவனுக்கான வாழ்க்கை தலையில் இருந்து இருப்போம் அது அவனுக்கு கிடைக்கும் என்று சொல்லி கண்கலங்க பாக்யாவும் செல்வியிடம் மன்னிப்பு கேட்டு கண்கலங்கி அழாத அக்கா நீ அழுதா ரொம்ப கஷ்டமா இருக்கு நீ இனிய பாப்பாவோட கல்யாண வேலையே பாரு என்று சொல்லுகிறார். மறுபக்கம் கோபி இனியாவை ஆகாஷ் வீட்டுக்கு அழைத்து வர இங்க எதுக்கு டாடி கூட்டிட்டு வந்தீங்க திருப்பி அவனை அடிக்கப் போறீங்களா நான் அவன் கூட பேசறது இல்ல கல்யாண விஷயம் கூட அவனுக்கு தெரியாது என்று சொல்ல பொறுமையா இரு இனியா அன்னைக்கு கோவத்துல அப்படி நடந்துருச்சு என்று சொல்லுகிறார். ஆனா இப்ப அவ மேல நான் எந்த கோபமும் படல அவங்கிட்ட ஒரு நாலு விஷயம் பேசணும் அவ்வளவுதான் என்று சொல்லி கூப்பிடுகிறார்.

ஆகாஷ் வெளியே வந்தவுடன் கோபியை பார்த்து பயப்பட நான் உன்னை அடிக்க வரல பேச தான் வந்து இருக்கேன் வீட்ல யாராவது இருக்காங்களா என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள்ள போய் பேசலாம் என செல்கின்றனர் உள்ளே வந்தவுடன் ஆகாஷ், இனியா பார்த்துக் கொண்டே இருக்க கோபி என் பொண்ணுக்கு பெரிய இடத்துல கல்யாணம் பேசி முடித்திருக்கோம் தெரியும் என்று சொல்ல தெரியும் சார் அம்மா சொன்னாங்க என்று சொல்லுகிறார். அந்தப் பையன் டிவில பாத்துட்டு இனியாவ லவ் பண்ணி இருக்கான் இனியாவுக்கும் நிதிஷ புடிச்சிருக்கு என்று சொல்ல டாடி என்று இனியா சொல்லுகிறார். அமைதியா இரு இனியா என்று சொல்லிவிட்டு ஆகாஷ் இடம் அவளுக்கு இன்னும் மனசுல உன்ன பத்தின ஒரு சின்ன கஷ்டம் இருக்கு அதுக்கு நீ தான் பதில் சொல்லணும் என்று பேசி முடிப்பது போல் ஆகாஷ் இனியாவிடம் நீ உங்க அப்பா சொல்ற பையன கல்யாணம் பண்ணிகோ ஏன் லைஃப்ல நிறைய லட்சியம் இருக்கு உன்னால வர பிரச்சனையே என்னால சந்திச்சிட்டு இருக்க முடியாது என்று சொல்லிவிட இனியா அதிர்ச்சியடைகிறார். உடனே கோபி சரி நல்லா படிக்கணும் என்று ஆகாஷிடம் சொல்லிவிட்டு கிளம்ப போக மீண்டும் ஆகாஷ் இனியாவை கூப்பிட்டு ஆல் தி பெஸ்ட் என்று சொல்ல இனியா அழுது கொண்டு கோபமாக சென்று விட கோபியும் பின்னாலேயே சென்று விடுகிறார் பிறகு ஆகாஷ் இனியாவை நினைத்து அழுகிறார்.

இனியா ரூமில் அழுது கொண்டிருக்கும் பாக்கியா வருகிறார் என்னாச்சு இனியா என்ன விஷயம் என்று கேட்டால் இனிய அழுது கொண்டே இருக்க பிறகு கொஞ்ச நேரம் கழித்து கோபி நித்ஷ் பார்க்க அழைத்துச் சென்ற விஷயத்தை பிறகு ஆகாஷ் வீட்டுக்கு சென்று ஆகாஷ் வாயாலயே டாடி சொன்ன பையன கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்ல சொல்றாரு என்று சொல்லி அழுகிறார். எனக்கு என்ன முடிவு எடுப்பது என்று தெரியவில்லை என்று சொல்ல பாக்யா நீ மறந்துட்டியா உனக்கு எது சரின்னு படுதோ அந்த முடிவு எடு ஆனால் முடிவு எடுத்ததுக்கப்புறம் யோசிக்காத என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார் பிறகு இனியா ஆகாஷ் உடன் இருந்த நாட்களையும் கோபி பேசிய வார்த்தைகளையும் நினைக்கிறார்.

மறுநாள் காலையில் கோபி, ஈஸ்வரி ,செழியன் ஹாலில் இருக்க ஈஸ்வரி பதற்றமாக இருக்கிறார்.ஏமா இப்படி இருக்கீங்க என்று கேட்க இனியா மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கூட புடவை எடுக்க போயிருக்க அவங்க உம்முன்னு இருந்தா உங்களுக்கு ஏதாவது சந்தேகம் வந்துரும் என்று சொல்ல அதுதான் ஜெனி எல்லாரும் போய் இருக்காங்க இல்ல பாத்துப்பாங்க என்று சொல்லுகிறார். ஆனால் ஈஸ்வரி நீ வேணா இனியாக்கு ஒரு போன் போடுறியா கோபி என்று கேட்டுவிட்டு நீ வேணா என்று சொல்லி விட்டு செழியன் கிட்ட ஜெனிக்கு போன் போட சொல்லுகிறார். அதற்குள் அனைவரும் வந்துவிடுகின்றனர். சுதாகர் குடும்பத்தினர் என்ன சொல்லுகின்றனர்? அதற்கு ஈஸ்வரியின் பதில் என்ன? பாக்யா என்ன சொல்லுகிறார்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

baakiyalakshimi serial today episode update 08-04-25
baakiyalakshimi serial today episode update 08-04-25