சூர்யா கேட்ட கேள்வி, நந்தினி சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் கல்யாண பத்திரிக்கை அடிக்கும் போது எந்த நாட்டுல வேலை செய்றாங்க என்பதை கௌரவத்துக்காக போடுவாங்க என்று சொல்லுகிறார். அதற்கு சூர்யா படிக்காதவங்க பாரின்ல இருந்தா அது கௌரவமா என்று சொல்லி இது இன்ட்ரஸ்டிங்கா இருக்கு நந்தினி. அப்போ இப்படி எல்லாம் போறத பார்த்தா மத்தவங்களுக்கும் வந்து இதை பார்க்கும் போது படிக்கணும்னு ஆசை இருக்கும் இல்ல என்று சொல்ல எனக்கும் ஆசை இருந்தது எங்க அம்மா இறந்ததினால் என்னோட ஆசை நிறைவேறாமல் போயிடுச்சு என்று சொல்ல அப்ப நீ என்ன ஆகணும்னு ஆசைப்பட்ட நந்தினி என்று கேட்க டீச்சராக ஆசை என்று சொல்லுகிறார்.
உடனே சூர்யா மீண்டும் பத்திரிக்கையை படிக்க ஆரம்பிக்கிறார். அதில் சூர்யா நந்தினி முன்னிலையில் திருமணம் நடைபெறும் என்று போட்டிருப்பதால் சூர்யா சந்தோஷப்பட நந்தினி என்ன பிரச்சனை நடக்கப்போகுதோ தெரியலையே என்று சொல்லுகிறார். எதுக்கு இதுல நம்ம பேர் போட்டு இருக்காங்க என்று சூர்யா கேட்க ஏன்னா இங்க நான் நிம்மதியா இருக்கக்கூடாது இல்ல அதுக்கு தான் என்று சொல்லி இப்போ கீழே எவ்வளவு சத்தம் கேட்கும் பாருங்க என்று நந்தினி சொல்லி முடிப்பதற்கு சுந்தரவல்லி பத்திரிக்கை தட்டை வெளியில் விசிறி அடிக்கிறார். உடனே அருணாச்சலம் வந்து சுந்தரவல்லி திட்ட உங்க பங்காளிக்கு மரியாதை என்றால் என்ன என்று தெரியுமா என்று கேட்கிறார். இதனைக் கேட்ட சூர்யா தாய்க்குலம் தான் டென்ஷனாக இருப்பாங்க வா நந்தினி என சந்தோஷப்பட்டு நந்தினியை இழுத்து செல்கிறார்.
உனக்கு இப்ப என்னதான் பிரச்சனை என்று சொல்ல அந்த கன்றாவிய நான் எப்படி சொல்ல முடியும் என்று சுந்தரவல்லி சொல்ல சூர்யா நான் சொல்றேன் டாடி என்று வந்து அருணாச்சலம் கையில் இருக்கும் பத்திரிக்கையை வாங்கி படித்துக் காட்டுகிறார் இப்ப புரியுதா டாடி கோவத்துக்கு காரணம் என்ன என்று சொல்லுகிறார். உடனே சுந்தரவல்லி இப்போ உங்களுக்கு மனசு குளிர்ந்திருச்சா என்று சொல்ல அவன் ஒரு மரியாதைக்காக போட்டு இருக்கான் என்று சொல்ல அது எப்படி என்னால ஏத்துக்க முடியும், அவளும் நானும் ஒன்னா அவ பேரையும் என் பேரையும் பத்திரிக்கைல போட்டா நானும் அவளும் ஒன்னாயிடுவோமா என்று பேசிக் கொண்டே இருக்க சூர்யா இன்னும் வெறுப்பேத்துகிறார். மனுஷனை மனுஷனா மதிக்கத் தெரியாத கௌரவமும் ஸ்டேட்டஸ் இருந்தா என்ன செத்தா என்ன என்று சூர்யா சொல்ல இவனுக்கு வேணாம் எதுவும் இல்லாம இருக்கலாம் ஆனா எனக்கு ஸ்டேட்டஸ் கௌரவம் தான் முக்கியம். என்று சொல்ல அப்ப அவங்க கேட்கிறது கடையில் வாங்கி கொடுத்துடுங்க டாடி என்று கிண்டல் அடிக்கிறார்.அருணாச்சலம் சுந்தரவல்லிக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்க நீங்க எதுக்கு டாடி இப்படி பேசிக்கிட்டு இருக்கீங்க கல்யாணம் என்னைக்கு மட்டும் சொல்லுங்க நானும் நந்தினி போயிட்டு வந்துடறோம் என சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
மறுபக்கம் நந்தினி சோகமாக உட்கார்ந்து கொண்டு சுந்தரவல்லி பேசியதை நினைத்து கண் கலங்குகிறார். அந்த நேரம் பார்த்து கல்யாணம் வந்து என்னாச்சு என்று கேட்கிறார். அம்மா பேசுறது என்ன புதுசா விட்டுவிட்டு வேலையை பாருமா என்று சொல்ல இந்த வீட்ல மனசு விட்டு பண்ற விஷயம் நான் அழுகிறது மட்டும்தான் என்று சொல்ல அதுக்காக அழுதுகிட்டே இருக்க முடியும்மாமா ஊர்ல இருந்து வந்தவங்க பண்ண தப்புக்கு நீ என்னம்மா பண்ணுவ என்று கேட்கிறார். சின்னையா உனக்கு எவ்வளவு சப்போர்ட்டா இருக்காரு உனக்கு ஏதாவது பிரச்சனைனா முன்ன வந்து நிற்கிறார் அதுபோல ஒரு யானை பலம் இருக்கும்போது விஷக்கிருமிங்க பேச்செல்லாம் கேட்டுகிட்டு இருக்காத சூர்யா சாரோட மனசு தான் உனக்கு ஆறுதல் எதுவா இருந்தாலும் அவர்கிட்ட சொல்லு என்று சொல்லுகிறார். எப்படி கல்யாணம் நடந்தது என்று யோசிப்பதை விட எப்படி வாழலாம் என்றது தான் யோசிக்கணும் என்று கல்யாணம் சொல்லுகிறார்.
என்ன பொறுத்த வரைக்கும் உனக்கு ஒரே அட்வைஸ் தான் சொல்லுவேன் எப்ப பார்த்தாலும் இந்த வீட்ட விட்டு போகிறேன் என்று சொல்றத மட்டும் நிறுத்து. நீ என்னைக்கு இந்த வீட்டோட மருமக என்று மனசுல நினைக்கிறியோ அன்னைக்கே மூணாவது மனுஷன் உன் விஷயத்துல வரத நிறுத்துவாங்க என்று அட்வைஸ் சொல்ல அருணாச்சலம் வருகிறார். இது மாதிரி ஒரு பிரச்சனை வரும்போது உங்கிட்ட வந்து பெருசா எடுத்து காதன சொல்றது ஒன்னு பெருசு இல்லம்மா அவ குணம் நாளுக்கு நாள் பெருசாகிட்டே தான் இருக்கு. இந்த கல்யாணம் நடந்ததுக்கப்புறம் நீ இந்த வீட்ட விட்டு போய் ஆகணும்னு சொன்ன ஆனா நானும் உங்க அப்பாவும் உன்னை கட்டாயப்படுத்தி இந்த வீட்ல இருக்க வச்சோம். இந்த வீட்ல நடக்கிற அசிங்க அவமானத்துக்கு நான்தான் காரணமோ என்று குற்ற உணர்ச்சியா இருக்கு என்று சொல்ல நந்தினி நீங்க எங்கள வாழ வச்ச தெய்வம் நீங்க இப்படி எல்லாம் பேசாதீங்க என்று சொல்லுகிறார். மறுநாள் காலையில் நந்தினி செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டு இருக்க கல்யாணம் வந்து பிரச்சனை எல்லாம் மறந்துட்டியா அம்மா என்று கேட்ப மறந்துட்டேன் எல்லாம் சொல்ல முடியாதுன்னு ஏதோ இருக்கேன் என்று சொல்லுகிறார். எல்லா வேலையும் நீயே செஞ்சுட்டா மீது பேர் சும்மா இருக்க வேண்டியது தான் போல என்று சொல்லிக் கொண்டிருக்கிற மரத்தின் கிளை உடைஞ்சிருப்பது கவனிக்கிறார். உடனே நந்தினி இப்படியே விட்டா மரம் காஞ்சி போய்டும் இதுக்கு உடனே சாணி வைத்து சரி பண்ணலாம் என சொல்லி கல்யாணத்திடம் பக்கத்து தெருவில் இருப்பதாக சொல்லுகிறார் பிறகு கல்யாணம் போக தயங்க நானே போறாங்க என்று சொல்லி நந்தினி சாணம் எடுத்துக்கொண்டு வந்துவிட்டு கல்யாணத்திடம் ஒரு துணியை எடுத்துக் கொண்டு வர சொல்லுகிறார்.
உடனே கல்யாணம் துணியுடன் அருணாச்சலத்தையும் அழைத்து வருகிறார் நந்தினி மரத்துக்கு ஆபரேஷன் பண்ணது தான் சொல்றாங்க வாங்கய்யா என்று சொல்ல, நந்தினி உடைந்த கிளையில் சாணம் வைத்து அழுத்தி அதில் துணியை கட்டுகிறார். உடனே உன்னோட காயத்துக்கு மருந்து போட்டாச்சு இனி உனக்கு வலிக்காது என்று சொல்லி மரத்திடம் பேச உனக்கு மனுஷங்களை விட மரம் செடி கொடி மேல விருப்பம் அதிகமா இருக்கு உன் மனசுக்கு எது சந்தோஷமா இருக்கோ அதை செய்யுமா என்று சொல்லி உனக்கு என்னென்ன செடி பிடிக்குமோ ஐந்து வெச்சு வள என்று சொல்லுகிறார் இங்கதான் இவ்வளவு செடி இருக்கு ஐயா என்று சொல்ல அதெல்லாம் நீ வரதுக்கு முன்னாடி இருந்தது இதுக்கு அப்புறம் நீ வாங்கி வச்சு வளர்த்துக்கோ என்று சொல்லி கல்யாணத்திடம் நந்தினி என்னென்ன செடி கேக்குதோ எல்லாத்தையும் வாங்கி கொடு என்று சொல்லுகிறார் உடனே கல்யாணம் இது போல மாமனார் யாருக்கு கிடைக்கும் என்று சொல்ல நந்தினி சந்தோஷப்படுகிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா குடித்துவிட்டு நந்தினியிடம் நீதான கிராமத்தில் வளர்ந்த பொண்ணு எங்க ஊரு மரம், எங்க ஊரு குளம் என்று சொல்லுவ, அப்போ நீ தான் சொல்லணும் என்று சொல்லுகிறார்.
எனக்கு அதெல்லாம் தெரியாது சார், நீங்க ஏதோ புதுசா கேக்குறீங்க என்று சொல்லுகிறார் உடனே சூர்யா புதுசா தான் கேட்கிறேன் ஆனால் நியாயமா கேக்குற இல்ல என்று சொல்லிக் கொண்டிருக்க அருணாச்சலம் வந்து ஏதாவது பிரச்சனையை இழுத்து விற்றாத போய் படுடா என்று சொல்லுகிறார். என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
