வருத்தப்பட்ட எழில், பாக்கியா எடுத்த முடிவு, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.
பாக்கியாவை நினைத்து எழில் வருத்தப்பட்டுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் எழில் வருத்தப்பட்டு நின்று கொண்டிருக்கிற அங்கே வந்த கோபி பங்க்ஷன் எப்படி சூப்பரா போச்சு இல்லை என்று சொல்ல எழில் நீங்க நினைச்சது நடத்திட்டீங்க இல்ல என்று சொல்லுகிறார். நீ மட்டும் என்ன உங்க அம்மாவோட பேரு டைட்டில்ல வச்சிருக்க, மைக்கை வாங்கி அம்மாவோட புகழ பேசின அதுக்கப்புறம் என்ன என்று கேட்கிறார். அவ ஒண்ணுமே பண்ணல,நான் எல்லாம் பண்ணிட்டு என்ன ஒதுக்கி வைக்கிறீங்க பரவால்ல என்று சொல்லுகிறார்.
அழகா ஒரு பிளே பண்ணி கடைசியா ஜெயிச்சுட்டீங்க ஆனா ஒரு மகனான தோத்துட்டேன் நான் இங்க வரக்கூடாதா என்று சொல்லி அழுதேன் எங்க அம்மாவோட முகம் நான் செத்தாலும் மறக்காது. அது மட்டும் இல்லாம நீங்க தான் இந்த வாய்ப்பு வாங்கி கொடுத்தீர்கள் என்று தெரிந்து இருந்தால் அக்ரிமெண்ட்ல சைன் போடறதுக்கு முன்னாடி தெரிஞ்சு இருந்தா கண்டிப்பா நான் வேற ஒரு முடிவு எடுத்திருப்பார் ஆனா இன்னைக்கு கரியரா எங்க அம்மாவா அப்படின்னு யோசிக்கிற முடிவு சத்தியமா வாழ்நாள வரும்னு நான் நினைக்கல ஆனா வந்துடுச்சு எங்க அம்மா கண்டிப்பா புரிஞ்சிப்பாங்க என்று சொல்லி அங்கிருந்து கிளம்புகிறார்.பாக்கியா சோகமாக வீட்டுக்கு வர ஈஸ்வரி என்ன நடந்தது நீ மட்டும் வந்துட்ட, எல்லோரும் வரலையா போட்டோ எடுத்தியா என்றெல்லாம் கேட்க பாக்யா எதுவும் பேசாமல் இருக்க, என்னாச்சு பாக்கியா என்று கேட்க நான் ஃபங்ஷனுக்கு போகல அத்தை என்று சொல்லுகிறார். ஏன் போகல உனக்கு ரெஸ்டாரன்ட் வேலை தான் முக்கியமா என்று கேட்க ஆர்டர் அதிகமா இருக்கு ஆள் எல்லாம் கம்மியா இருக்காங்க நான் எப்படி போறது என்று சொல்லி சமாளிக்கிறார்.
ஈஸ்வரி எழில் விஷயத்தை பேச உடனே பாக்யா ரெஸ்டாரன்ட்க்கு கிளம்புங்க போகணும் என்று சொல்லுகிறார் என்னால வர முடியாது என்று ஈஸ்வரி பிடிவாதமாக இருக்க, மாமா மேல சத்தியமா நீங்க ரெஸ்டாரண்டுக்கு வந்து தான் ஆகணும் என்று உறுதியாக சொல்லிவிடுகிறார். வேறு வழியில்லாமல் ஈஸ்வரியும் ரெஸ்டாரண்டுக்கு வர பேக்கிங் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. செல்வி பாக்யாவிடம் வந்து பூஜை எப்படி போச்சு அக்கா என்று கேட்க அதெல்லாம் நல்லாத்தான் போச்சு. அதுல அப்புறம் மட்டும் பேசிக்கலாம் இப்ப வேலையை பாரு என்று சொல்ல ஈஸ்வரி உள்ளே வருகிறார்.
பிறகு செல்வியிடம் அத்தைக்கு சாப்பிட ஏதாவது கொடு என்று சொல்லிவிட்டு ஆர்டர் பேப்பரை வாங்கிக் கொண்டு செல்கிறார். செல்வி ஜூஸ் கொடுக்க வாங்க மறுத்த ஈஸ்வரி பிறகு வாங்கி கொள்கிறார் என்னதான் வேலை இருந்தாலும் ஒரு பையனோட படம் பூஜைக்கு போகாம எப்படியா இருப்பா என்று செல்வியிடம் சொல்ல அவரும் வேலை இருக்குல்லம்மா என்று சொல்லி சமாளித்து விடுகிறார். உடனே பாக்யாவிடம் வந்த செல்வி ஃபங்ஷன் நல்லா போச்சுன்னு சொன்னா நீ போகவே இல்லைன்னு உங்க மாமியார் சொல்றாங்க என்று கேட்க நான் அப்புறம் சொல்றேன்னு என சொல்லுது செல்வி என்ன நடந்துச்சு என்று சொல்லுகா என்று வற்புறுத்தி கேட்கிறார். நான் ஃபங்ஷனுக்கு போன ஆனா எழில் நீங்க உள்ள வந்தா பங்க்ஷன் நடக்காது இந்த படம் நல்லா நடக்கணும்னா நீங்க வந்து போகணும் என சொல்லிட்டான் என்று சொல்ல எப்படிக்கா என்று சொல்லி அதிர்ச்சியாக நிற்க இத பத்தி அப்புறம் பேசிக்கலாம் போய் வேலையை பாரு அத்தை கிட்ட சொல்லாத என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.
பிறகு ஒரு பேக்கிங் ரெடி ஆயிடுச்சு வாங்க பூஜை பண்ணிடலாம் என்று பாக்யா ஈஸ்வரியை கூப்பிடுகிறார். ஈஸ்வரி என்ன சொல்லப் போகிறார்? அதற்கு பாக்யாவின் பதில் என்ன?ஈஸ்வரி பூஜை தொடங்குவாரா? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.