முடிவில் உறுதியாக இருக்கும் விஜயா, அண்ணாமலை சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
விஜயா முடிவில் உறுதியாக இருக்க அண்ணாமலை வார்த்தை ஒன்றை சொல்லி உள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயாவை வந்து சந்தித்த அண்ணாமலை சத்யா மேல் கொடுத்த கேசை வாபஸ் வாங்குமாறு கேட்கிறார். நீங்களும் தப்புன்னு தானே சொல்லிக்கிட்டு இருந்தீங்க இப்படியே வந்து கேக்குறீங்க என்று கேட்க, அந்தப் பையனுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் அந்த குடும்பமே வாழ்நாள் ஃபுல்லா கஷ்டப்படும், என்று சொல்லி விஜயாவுடன் பேசுகிறார். ரொம்ப நேரம் பேச்சு வார்த்தைக்கு பிறகு விஜயா நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அந்தப் பூ கற்றவ வீட்டில் இருக்கக் கூடாது என்று சொல்லுகிறார்.
உடனே அண்ணாமலை அவங்க சந்தோஷமா வாழ்ந்துகிட்டு இருக்காங்க அவங்கள வீட்ட விட்டு போக சொன்னா எங்க போவாங்க என்று சொல்ல எங்கேயாவது போகட்டும் என்று சொல்லுகிறார் உனக்கு முத்து மேல மட்டும் ஏன் பாசமே வர மாட்டேங்குது என்று கேட்கிறார்.
உன்னால முடியாதத மீனா வந்ததுக்கப்புறம் அவன் குடிக்காம சந்தோஷமா இருக்கான் அதை என்னால கெடுக்க முடியாது என்று உறுதியாக சொல்லுகிறார். உன் முடிவுல மாற்றம் எதுவும் கிடையாதா என்று விஜயாவை கேட்க அப்போ என்னால கேச வாபஸ் வாங்க முடியாது என்று சொல்ல அண்ணாமலை விஜயாவை திட்டி விட்டு செல்கிறார். வெளியே வரும் நேரத்தில் மனோஜ் மற்றும் ரோகினி இருவரும் வர சமாதானப்படுத்த வந்தீங்களா என்று கேட்க மனோஜ் தள்ளிவிட்டு சென்று விடுகிறார். ரோகினி விஜயாவை வீட்டுக்கு கூப்பிட இதுதான் சரியான நேரம் வந்து ஒரு முடிவு கட்டாம நான் அந்த வீட்டுக்கு வரமாட்டேன் என்று சொல்லி ஒரு முடிவோட இருக்கிறார். முத்து காபி குடித்துக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து சுருதி வந்து மீனாவிடம் மன்னிப்பு கேட்கிறார். எதற்கு என்று கேட்க நாங்களும் ஒரு தலை பட்சமா பேசிட்டோம் அப்புறம் ரவி சொன்னதுக்கு அப்புறம் புரிஞ்சது ஆன்ட்டி அவளை எவ்வளவு ட்ரிகர் பண்ணி இருக்காங்கன்னு, அதனாலதான் அவன் அப்படி பண்ணி இருக்கான் என்று சொல்லி இருவரும் மீனாவிடம் மன்னிப்பு கேட்க முத்து இப்பவாது புரிஞ்சதே என்று சொல்லுகிறார்.
இப்போ என்னடா பண்ணப் போற என்று கேட்க அப்பா கிட்ட விஷயத்தை சொல்லி கேஸ் வாபஸ் வாங்க அம்மா கிட்ட சொல்ல சொல்லி இருக்கேன் என்ன சொல்றாங்கன்னு பார்க்கலாம் என்று காத்துக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து அண்ணாமலை உள்ளே வந்து உட்காருகிறார். என்னாச்சுப்பா என்று கேட்க அமைதியாக இருந்த அண்ணாமலையை பார்த்து மீனா வாபஸ் வாங்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க மாமா பதில் உங்க முகத்துலையே தெரியுது என்று சொல்லுகிறார். ஆமாமா அவ பிடிவாதமா இருக்கா என்று சொன்ன பிறகு வேறு ஏதாவது சொன்னாங்களா அப்பா என்றும் முத்து கேட்க ஆமா சொன்னா கேச வாபஸ் வாங்கணும்னா நீயும் மீனாவும் வீட்டை விட்டு போகணும்னு சொன்னா அதுக்கு நான் உயிரோடு இருக்கிற வரைக்கும் நடக்காது என்று சொல்லிவிட்டு வந்துட்டேன். வேற ஏதாவது பாப்போம் என்று அண்ணாமலை எழுந்து நிற்க முத்து அப்பா என்று கூப்பிட்டு கட்டிப்பிடித்துக் கொள்கிறார்.
வக்கீலை வந்து முத்துவும்,மீனாவும் பார்க்க கேஸ் வாபஸ் வாங்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க சார் என்று சொல்லுகிறார் முத்து. அப்போ கொஞ்சம் கஷ்டம் தான் இருந்தாலும் கொஞ்சம் காசு அதிகமா செலவு ஆகும் 5 லட்சம் ரெடி பண்ணுங்க என்று சொல்ல அவ்வளவு காசுக்கு எங்க போறது கம்மி பண்ண மாட்டீங்களா சார் என்று கேட்க திருட்டு கேஸா இருக்கறதுனால கொஞ்சம் செலவாகும் ரெடி பண்ணிட்டு வாங்க எவ்வளவு லேட் பண்றீங்களோ அவ்வளவு பிரச்சனை என்று சொல்லுகிறார்.சரியென சொல்லிவிட்டு முத்து உன் மீனாவும் வெளியே வந்து பணத்திற்கு என்ன பண்ணுவது என்று யோசிக்க சீதாவிற்கு பார்த்த மாப்பிள்ளை முத்துவிற்கு ஃபோன் பண்ணுகிறார்.
முத்துவிடம் என்ன பேசுகிறார்? அதற்கு முத்துவின் பதில் என்ன? அடுத்து என்ன நடக்கப்போகிறது? என்று எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.