Ayan Movie Box Office Report
Ayan Movie Box Office Report

சூர்யாவின் அயன் படம் பெற்ற மொத்த வசூல் என்ன என்பதை பார்க்கலாம்.

Ayan Movie Box Office Report : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் சூர்யா நடிப்பில் கேவி ஆனந்த் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் அயன்.

சூர்யா, தமன்னா, பிரபு மற்றும் பல நடிகர்கள் இணைந்து நடித்திருந்த இந்தப் படம் ரூபாய் 20 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருந்தது.

அஜித், விஜய் படம் கூட இல்ல.. அவருக்கு பிடித்த படம் சூர்யாவின் இந்த படம் தானாம் – ஆதாரத்துடன் இதோ.!

இந்தப் படம் உலகம் முழுவதும் 2009 ஆம் ஆண்டில் ஏப்ரல் மூன்றாம் தேதி வெளியானது. முதல் நாளே ரூபாய் 5 கோடி வசூல் செய்த இப்படம் முதல் வார முடிவில் 17 கோடியும் ஏழு நாட்களில் 29 கோடியும் வசூல் செய்துள்ளது.

மொத்தமாக உலக அளவில் 64 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதில் இந்தியாவில் மட்டுமே பெற்ற வசூல் 44 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.