பாக்யா மீது கோபி வன்மத்தில் இருக்க, எழில் பாக்யாவிடம் பேசியுள்ளார்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலை இன்றைய எபிசோடில் கோபி ராமமூர்த்தியை பற்றி பேசுகிறார். அதில் அவரோட விருப்பமா தான் பொறந்ததிலிருந்து இருந்தேன் ஆனா என்னோட சந்தோஷத்துக்காக ஒரு கல்யாணத்தை பண்ணது இந்த வீட்ல பெரிய தப்பா போயிருச்சு அதனால எனக்கு மிஸ்டர் ராமமூர்த்தி பெரிய தண்டனை ஒன்று கொடுத்திருக்கிறார். நான் என் பசங்களுக்கு நல்ல அப்பாவா இருந்திருக்கேன் ஆனா எனக்கு அவரு ஒரு நல்ல அப்பாவா இல்லை என்று சொல்லிவிட்டு வெளியே வருகிறார்.
பாக்கியா வெளியே வந்து கோபியை நிற்க வைத்து உள்ளே பேசியதை குறித்து பேச ஆரம்பிக்க என்னோட அப்பாவை பத்தி பேசினதுக்கு நீ வந்து எப்படி பேசணும்னு சொல்றியா என்று கேட்க உங்க அப்பாவை பத்தி பேசினதுக்கு நான் எந்த உடன்பாடும் சொல்ல போறது கிடையாது ஆனா நீங்க ஒரு நல்ல அப்பாவா இருக்குன்னு சொன்னத என்னால ஏத்துக்க முடியாது. நீங்க ஒரு நல்ல அப்பா கிடையாது. படிக்க வச்ச படிக்க வச்சேன்னு சொல்றீங்க உலகத்துல இருக்குற எல்லா அப்பாவும் செய்ய வேண்டிய கடமையைத்தான் நீங்க செஞ்சீங்க அவங்க வாழ்க்கையில நீங்க என்ன பண்ணிங்க என்று கேள்வி கேட்கிறார். செழியன் ஜெனியை விரும்பிய போது நான் தான் கல்யாணம் பண்ணி வச்ச எழில் அமிர்தாவை விரும்பிய போதும் நான் தான் திருமணம் செய்து வைத்தேன் என்று சொல்லுகிறார். கடைசி காலத்துல உங்க அப்பாக்கு உங்களால் சந்தோஷம் இருந்துச்சா கிடையாது என்று சொல்ல கோபி, உன் வேஷத்தை நம்பி இந்த குடும்பம் பின்னாடி இருக்கு ஆனா எனக்கு ஒரு காலம் வரும் அப்போ நான் பாத்துக்குறேன் என்று சாபம் விட்டு கிளம்புகிறார்.
ரெஸ்டாரண்டில் கோபி உட்கார்ந்து கொண்டிருக்க அந்த நேரம் சாப்பாடு டெலிவரி எடுத்துக் கொண்டு போகின்றன என்ன டெலிவரி என்று கோபி கேட்க ராதிகா மேடம் ஆஃபீஸ் என்று சொல்லுகிறார் ஒரு மணி ஆயிடுச்சு இப்பதான் எடுத்துட்டு போறீங்களா எப்பவுமே லேட்டா தான் எடுத்துட்டு போவீங்களா என்று கேட்க சாரி கேட்டுவிட்டு அவர்கள் எடுத்துச் செல்கின்றனர்.
அவருடைய நண்பர் செந்தில் வர அவருடன் பேசிக் கொண்டிருக்கிறார். நீ குடிச்சிட்டு அப்படி பண்ண அதனால ராதிகாவுக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு இனிமே அப்படி பண்ணாத என்று சொன்ன நான் குடிக்கிறதுக்கு காரணம் ராதிகா கிடையாது என்னோட குடும்பமும் அந்த பாக்கியவால தான் குடிக்கிறேன் என்று சொல்லுகிறார்.
பிறகு பாக்கியாவின் ரெஸ்டாரண்டிற்கு சென்ற விஷயத்தை சொல்ல நீ எதுக்கு அங்க போன என்று கேட்க அப்பாவுக்கு அஞ்சலி செலுத்தி போட்டோ ஓபன் பண்ணுங்க அதுக்காக போன அவை என்னன்னு நாடகம் நடத்துறான்னு பாக்கப்போன என்று சொல்ல பேசாம கிளம்பி வந்துடுன்னுதான் நினைச்சேன் ஆனா என் வாழ்க்கைல ரொம்ப வருஷம் அமைதியாக இருந்துட்டேன் ஆனா இன்றைக்கு எல்லாத்தையும் பேசிட்ட என்று சொல்ல ,எதுக்குடா உனக்கு இந்த வேலை என்று சொல்லுகிறார் யாராச்சும் எதனா சொன்னாங்களா என்று கேட்க யாரும் எதுவும் சொல்லல ஆனா பாக்கியா தான் வந்து நீங்களே ஒரு நல்ல அப்பா கிடையாது என்று சொன்னான் பசங்களுக்கு தெரியும் இவ யாரு எனக்கு சர்டிபிகேட் கொடுக்கிறதுக்கு என்று சொல்லுகிறார் எதுக்குடா இந்த தேவையில்லாத வேலை இதையெல்லாம் விட்டுடு என்று சொல்ல விட முடியாது என்று கோபமாக பேசுகிறார் கோபி.
இதெல்லாம் வேணாம் விட்டுடு என்று நண்பர் சொல்ல நான் எப்படி குடும்பத்தை விட்டுட்டு தனி மரமா நிக்கிறனோ அதே மாதிரி பாக்கியாவையும் நிற்க வைப்பேன் என்று முழு குடும்பத்தோடு பேசுகிறார் அவர்கள் நண்பர் எவ்வளவு சொல்லியும் கோபி முக முடிவில் உறுதியாக இருக்கிறார்.
பாக்கியா ரெஸ்டாரன்ட் எழில் கூட பேச என்ன பேசுகிறார்? அதற்கு எழில் என சொல்லுகிறார்? என்று இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.