உழைப்பு இருந்தால், எந்த துறையிலும் யாவருக்கும் முன்னேற்றம் வரும் தானே.! அவ்வகையில், தமிழ் சினிமாவில், காமெடி ஆக்டர் என்ற அடையாளத்திலிருந்து விலகி ஹீரோ, நல்ல நடிகர் என்ற அடையாளத்துக்குள் வந்திருக்கிறார் நடிகர் சூரி.
அவரது நடிப்பில், கடந்த மாதம், ‘கொட்டுக்காளி’ திரைப்படம் வெளியானது. கூழாங்கல் படத்தை இயக்கி கவனம் ஈர்த்த பி.எஸ்.வினோத்ராஜ் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். இந்தச் சூழலில் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
திரைப்படங்கள் மட்டுமின்றி, சின்னத்திரையிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார். சினிமாவை நம்பி உண்மையாக உழைத்தால் சினிமா நிச்சயம் கைவிடாது என்பதுதான் விதி. அந்த சினிமா சூரியையும் கைவிடவில்லை.
பல வருட நடிப்பு பசியில் கிடந்தவருக்கு சுசீந்திரன் புரோட்டா மூலம், சூரியின் பசியை ஆற்றினார். 50 புரோட்டாக்களை உண்ணும் காட்சியில் சூரி அதகளம் செய்ய, ‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்துக்கு அந்த சீன் அடையாளம் ஆனது. கூடவே சூரியும் அடையாளப்பட்டார். அதனையடுத்து, முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக மாறினார் சூரி.
கடந்த வருடம், வெளியான ;விடுதலை’ அவருக்கு அடுத்த அடையாளமாக மாறியிருக்கிறது. அடுத்ததாக நடித்த ‘கருடன்’ படமும் மெகா ஹிட்டானது.
கடைசியாக, பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் ‘கொட்டுக்காளி’ படத்தில் நடித்தார். அதில், அன்னா பென் கதாநாயகியாக நடிக்க, சிவகார்த்திகேயன் படத்தை தயாரித்திருந்தார். படத்தை சினிமா செலிபிரிட்டிகள் கொண்டாடினர். இந்நிலையில், சூரிக்கு பட நெருக்கடியில் ஏற்பட்ட பண நெருக்கடி போல.!
நடிகர் சூரியின் நடிப்பும் ரசிக்கத்கதுதானே. பார்ப்போம்.!