கங்குவா படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகிய இந்த படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
ஆனால் அதே தேதியில் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாகும் என அறிவித்ததால் பட குழு ரிலீஸ் தேதியை மாற்ற முடிவெடுத்தது. ஆனால் இதுவரை எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை.
ஆனால் தற்போது விடாமுயற்சி திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாக வாய்ப்புள்ளது என்பதால், தீபாவளிக்கு இந்த படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.
இது தவறினால் நவம்பர் 14ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளது என்ற தகவல் கசிந்து உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்து இருந்து பார்க்கலாம்.