ரோகிணி ஒரு திட்டம் போட மீனாவிற்கு காயம் பட்டு உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரவி வேலை செய்யும்ஹோட்டலின் ஓனர் குடும்பத்துடன் வருகின்றன. அவர் தன் மகளை அறிமுகப்படுத்தி இனிமே இந்த ஹோட்டல இவங்க தான் மேனேஜ் பண்ணுவாங்க என்று சொல்லிவிட்டு கிளம்புகின்றனர்.
உடனே ஹோட்டலுக்கு சுருதி வர, ரவி ஓனர் வந்திருக்காங்க ஒரு நிமிஷம் வந்துடுறன் என்று சொல்லிவிட்டு போகிறார். ஓனர் எல்லாரையும் கூப்பிட்டு நீங்க என்ன பாசா பார்க்க வேண்டாம் ஆனா உங்களுக்கு நான் பாசா இருப்பேன் என்று சொல்ல சுருதி இவன் என்ன பாசா இல்ல லூசா என்று கேட்கிறார். ரவியிடம் உங்களுக்கு இந்தி தெரியுமா இந்தி தெரிஞ்சா நிறைய வாய்ப்பு இருக்கு என்று சொல்ல ஸ்ருதி ஹிந்தியில் பேசுகிறார். யார் இந்த பொண்ணு என்று கேட்க என் வைஃப் என்று ரவி சொல்லுகிறார். உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா ரவி பார்த்தா அப்படி தெரியல என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். சுருதி சாப்பிட்டு ஷாப்பிங் போலாம் என்று கூப்பிட ரவி எனக்கு நிறைய வேலை இருக்கு புது ஓனர் வேற வந்திருக்காங்க நீ சாப்பிட்டு கிளம்பு என்று சொல்லுகிறார்.
மீனா அவரின் அம்மா வீட்டுக்கு வந்து சீதா வேலைக்கு போயிட்டாளா என்று கேட்க அவன் போயிட்டா ஆனா இந்த சத்யாவை நினைச்சா தான் எனக்கு பயமா இருக்கு என்று சொல்லுகிறார். என்னம்மா என்னாச்சு என்று கேட்க நீ கஷ்டப்படுவதை சொல்லவில்லை என்று சொல்லுகிறார். என்ன விஷயம் என்று சொல்லு என்று கேட்க அவன் குரூப் ஸ்டாடினு சொல்லி நைட்ல போய் தங்கிடுறான் ஆனா காலைல லேட்டாதா வரான். அவன் சட்டையை துவைக்க எடுக்கும்போது அதில் சிகரெட் தூள் இருந்தது என்று சொல்ல மீனா அதிர்ச்சி அடைகிறார். மீனாவின் அம்மா உங்க அப்பா கால் எடுக்க நின்னாலும் இந்த கெட்ட பழக்கம் கிடையாது அவன் குடிப்பானோனு பயமா இருக்கு என்று சொல்ல இதற்கெல்லாம் காரணம் அந்த சிட்டி தான் நான் அவனை போய் நாலு வார்த்தை கேட்டுட்டு வரேன் என்று கோபமாக கிளம்புகிறார்.
மறுபக்கம் பி ஏ வை ரோகிணியும் அவரது தோழியும் வந்து சந்திக்கின்றனர். ரோகினி இவ்ளோ நாளா என்ன டார்ச்சர் பண்ண பொறுத்துக்கிட்ட ஆனா என் பையனுக்கு ஏதாவது ஆச்சுன்னா அவ்வளவுதான் என்று கோபப்படுகிறார். கோபப்படாத கல்யாணி உன் பையன நான் என்ன பண்ண போறேன். நான் ரெண்டாவது கல்யாணம் பண்ணி இருக்கேன் பொண்டாட்டி கிட்ட சிங்கப்பூர் போய் இருக்கிறது தான் சொல்லிட்டேன் இப்ப திரும்பி வரும்போது பணம் வேணும் இல்ல அதனால 30 லட்சத்துல ஒரு சிங்கிள் பெட்ரூம் வீடு இருக்கு அதுக்கு காசு ரெடி பண்ணி குடு என்று கேட்க அதிர்ச்சி ஆகிறார் ரோகிணி.
அவ்ளோ காசுக்கு நான் என்ன பண்றது என்று கேட்க உன்னால முடியும் நீ தான் ஒரு வருஷமா ஒரு வீட்ட ஏமாத்திக்கிட்டு இருக்கே என்று சொல்ல ரெண்டு நாள் டைம் கொடுத்துவிட்டு போகிறார். கடுப்பான ரோகினி இத அத சித்தி கிட்ட சொல்லி ஏதாவது பண்ணனும் என்று திட்டம் போடுகிறார்.
மீனா சிட்டியை பார்க்க வந்து அவனிடம் சண்டை போடுகிறார் முதலில் சாதுவாக பேசி அவன் பிறகு அப்படி தாண்டி பேசுவேன் என்று சொல்ல மீனா கோபப்படுகிறார். என் தம்பியை கெடுக்கிறதே நீதான் என்று சொல்ல ஒரு வேலை போட்டு அவனுக்கு காசு கொடுத்தா என்னையே கெட்டவன்னு சொல்லுவியா என்று சொல்லுகிறார். மீனா கோபத்தில் அவனை அடிக்க கை ஓங்க பிடித்து கீழே தள்ளி விடுகிறாள் மீனாவிற்கு தலையில் அடிப்பட உடனே முத்து அங்கு வந்து சிட்டியை அடித்து வெளுத்து வாங்குகிறார்.
மீனாவுக்கு தலையில் ரத்தம் வர உடனே ஹாஸ்பிடலுக்கு கூட்டிப் போகிறார். மீனாவிற்கு என்ன ஆச்சு? என்ன நடந்தது என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.