கோட் படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்திலும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பு உருவாக்கியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
மேலும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு கோட் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் சினேகா, லைலா ,பிரசாந்த் பிரபுதேவா, யோகி பாபு, பார்வதி நாயர், மைக் மோகன் போன்ற பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
ஐந்தாயிரம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியான கோட் திரைப்படம் தமிழ்நாட்டில் வசூலில் மிரட்டி வருகிறது.
உலக அளவில் இந்தப் படம் 400 கோடி தாண்டி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகிறது. குறிப்பாக கமல்ஹாசன் நடிப்பில் வெளியான “விக்ரம்” படத்தின் வசூலை முறியடிக்க வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. விக்ரம் படம் 414 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.