தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா , அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் அரசியல்வாதி எக்ஸ் மினிஸ்டர் சுந்தரவள்ளியின் வீட்டிற்கு வருகிறார். அவரின் தொண்டர் ஒருவர் கூட வர அவர் பாக்கெட்டில் காசு இல்லாமல் இருப்பதை பார்த்து காசை எடுத்து வைக்கிறார். காலைல வைப்பீங்க சாயங்காலம் வாங்கிப்பீங்க அதுக்கு என்னோட பாக்கெட் காலியாக இருக்கட்டும் என்று அவர் சொல்ல இதெல்லாம் உனக்கு தெரியாது என் தொண்ட பணக்காரனா இருக்கணும் நான் ஒன்னும் இல்லாம இருக்கணும் என்று பேசிவிட்டு உள்ளே வர சுந்தரவல்லி குடும்பம் அவர்களை வரவேற்கிறது.
வீட்டில் அவர்களை உட்கார வைத்து சுந்தரவல்லி மகன் மற்றும் மகள்களை அறிமுகம் செய்து வைக்கிறார். அரசியல்வாதி அவரின் ஒரே மகளுக்கு திருமணம் என்று சொல்லி பத்திரிக்கை வைக்கிறார். ஓ அப்படியா தெரிஞ்சி இருந்தா நானும் என் பையனுக்கு பொண்ணு தேடிக்கிட்டு இருந்தேன் முதலிலேயே பார்த்திருக்கலாம் என்று சொல்ல அப்படி நடந்திருந்தால் எனக்கும் சந்தோஷம்தான் என்று சொல்லிவிட்டு அனைவரும் குடும்பத்துடன் கண்டிப்பாக வந்து விடுங்க என்று கூப்பிட்டு கிளம்புகிறார்.
மறுபக்கம் சூர்யா கிளப்பில் நண்பருடன் குடித்துக் கொண்டிருக்க திடீர்னு பக்தி அதிகமாயி கோயிலுக்கெல்லாம் போயிட்டியா மச்சான் என்று அவர் கேட்க அதற்கு சூர்யா எல்லா எங்க வீட்ல இருக்கறவங்க தான் காரணம் என்று சொல்லுகிறார். அப்ப உடனே கல்யாணம்தான் என்று சொல்ல அதற்கு வாய்ப்பே இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரம் பார்த்து அந்த எக்ஸ் மினிஸ்டர் மகள் திருமணம் செய்ய போகும் நபருடன் பாருக்கு வருகிறார். அவர் சைடிஷ்க்கு ஊறுகாயும் சீடையும் எடுத்துக்கொண்டு வந்ததை பார்த்து அவர் முகம் சுளிக்கிறார். அதே நேரத்தில் சூர்யாவிடம் வந்து பெண்கள் பேசுவதை பார்க்கிறார்.
சூர்யா சரக்கு வாங்க வந்த இடத்தில் அந்த பொண்ணு வந்து பியர் கேட்கிறார் இருவரும் ஒன்றாக இருப்பதை பார்த்த இவரது தோழிகள் பர்ஃபெக்ட் ஜோடி செம்ம அழகா இருக்கா என்று பேசிக்கொள்கின்றனர். ஃப்ளவர் பொக்கேவை சூர்யா கையில் கொண்டு வந்து கொடுக்க இவர் கிடையாது சாரி என்று சூர்யாவிடம் சொல்கிறார்.
இவன்தான் என்று கல்யாணம் பண்ணிக்க போகிற வரை காண்பிக்க உன்னுடைய ரேஞ்சுக்கு இவன் செட் ஆக மாட்டான் அந்த மாதிரி இருந்தா செம்மையா இருக்கும் என்று சொல்ல தப்பு பண்ணிட்டோமோ என்று யோசிக்கிறார். அரசியல்வாதியின் மகள் அவர் கட்டிக்க போகும் நபருடன் பாரிலிருந்து வெளியே வர அங்கு சிலர் வம்பு இழுக்கின்றனர்.
சூர்யா அங்கு வந்து நின்றவுடன் அவர்கள் பயந்து கொண்டு சென்று விடுகின்றனர். வீட்டுக்கு வந்த அர்ச்சனா அவரது அப்பாவிடம் எனக்கு இந்த கல்யாணம் வேணாம் என்று சொல்லுகிறார் அதற்கு அர்ச்சனாவின் அம்மா இஷ்டத்துக்கும் முடிவு மாத்திக்கிட்டு இருக்க முடியுமா நீ வேணும்னா கல்யாணம் பண்ண வேணாம் நிறுத்துவதற்கு இது என்ன விளையாட்டாய் என்று கேட்க, எனக்கு மாப்பிள்ளை தான் வேணாம்னு சொன்னேன் கல்யாணத்தை நிறுத்த சொல்லல என்று சொல்ல, என்னம்மா சொல்ற என்று அவரின் அப்பா கேட்கிறார் சூர்யாவின் புகைப்படத்தை அவருக்கு அனுப்பி உங்களுக்கு போன்ல ஒரு போட்டோ அனுப்பி இருக்கேன் பாருங்கள் என்று சொல்ல அவர் ஓபன் பண்ணி பார்த்து இது சுந்தரவள்ளியின் மகனாச்சே என்று சொல்லுகிறார்.
அதெல்லாம் எனக்கு தெரியாது கட்னா இந்த மாதிரி ஒரு பையன தான் கட்டுவேன் என்று சொல்லிவிட்டு மேலே கிளம்பி செல்கிறார். மறுநாள் காலையில் மினிஸ்டர் சுந்தரவல்லியின் வீட்டிற்கு வருகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்றைய ப்ரோமோவில் மினிஸ்டர் சுந்தரவல்லி இடம் என் பொண்ணு லவ் பண்ற பையன் வேற யாரும் இல்ல உங்க பையன் சூர்யா தான் என்று சொல்ல சுந்தரவல்லி சந்தோஷப்படுகிறார்.
மறுபக்கம் யாரோ இருவர் திருட்டுத்தனமாக எதையோ செய்கின்றனர்.அதனை பார்த்த நந்தினி யார்ரா நீங்க என்று துரத்தி செல்கிறார்.
அருணாச்சலம் சுந்தரவல்லி இடம் நம்ம பையனுக்கு புடிச்சிருக்கா வேணாமான்னு கேட்க வேணாமா என்று கேட்க என் பையன் சூர்யா மினிஸ்டர் ஓட பொண்ணு கழுத்துல தாலி கட்ட போறான் என்று சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.