Asuran Movie
Asuran Movie

Asuran Movie : தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி நான்காவது முறையாக இணைந்திருக்கும் படம் அசுரன்.

கொடி படத்தை தொடர்ந்து இப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். பூமணியின் வெக்கை எனும் நாவலை தழுவி இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

விஷாலின் அயோக்யா டீசர் படைத்த மிரட்டலான சாதனை – என்னன்னு நீங்களே பாருங்க!

தமிழ் சினிமாவின் பிஸி நடிகரான ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

 

இப்படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அப்டேட் செய்து வந்த ஜி.வி தற்போது புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஜி.வி., ஆடுகளம் படத்தில் இடம்பெற்ற ஒத்த சொல்லால பாடலை போல அசுரன் படத்திலும் ஒரு பாடல் இருப்பதாக ஜி.வி.தெரிவித்துள்ளார்.

Asuran Movie

மேலும் ஜி.வி.யின் ஃபேவரிட் பாடலாசிரியர் ஏகதேசி இப்படத்தில் சில பாடல்களை எழுதி இருப்பதாக அவர் ஏற்கனவே தெரிவித்தார்.

ஒத்த சொல்லால பாடலையும் இவரே எழுதியதால் இந்த படத்தில் அதுபோல இருக்கும் பாடலையும் இவரே எழுதியிருப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.