Ayogya

Ayogya Teaser Record :

வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் ‘அயோக்யா’. இத்திரைப்படத்தில் ராஷி கண்ணா, பார்த்திவன், கே.எஸ்.ரவிக்குமார், சோனியா அகர்வால், ஆர்.ஜே பாலாஜி உள்பட பலர் நடித்துள்ளனர்.

‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சிஎஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விஷ்ணு ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் மே 10-ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது. யூ டியூபில் இந்த டீசர் தற்போது வரை 65 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது. இதன் மூலம் விஷாலின் கேரியரில் அதை முறை பார்க்கப்பட்ட டீசர் எனும் புதிய சாதனையை இந்த டீசர் படைத்துள்ளது.

மேலும் அண்மையில் வெளியான இப்படத்தின் டிரைலர் தொடர்ந்து யூ டியூப் டிரெண்டிங்கில் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது.

தெலுங்கில் டெம்பர் எனும் பெயரிலும் இந்தியில் சிம்பா எனும் பெயரிலும் வெற்றி பெற்றn படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் வெளியாகவுள்ளது.

அண்மையில் தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி விவகாரம் இப்படத்தில் ஒரு சம்பவமாக இடம் பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

YouTube video

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.