Anjali Talk About Love With Jai
Anjali Talk About Love With Jai

நான் ஒருபோதும் ஜெய்யை காதலிக்கவில்லை என அஞ்சலி கூறியுள்ளார்.

Anjali Talk About Love With Jai : தமிழ் சினிமாவில் அங்காடி தெரு படத்தின் மூலமாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை அஞ்சலி. தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவர் குடும்ப பிரச்சினை காரணமாக ஒரு சிறிய இடைவெளி எடுத்துக் கொண்டார்.

அதன்பின்னர் பேரன்பு, நிசப்தம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவரும் நடிகர் ஜெய்யும் காதலித்து வருவதாக பல வருடங்களாக திரை உலகில் பேசப்பட்டு வந்தன.

சினிமாவில் படுக்கைக்கு அழைக்கிறார்கள், ஆனால் – அனுஷ்கா போட்டுடைத்த உண்மைகள்.!

அதற்கேற்றாற்போல நடிகர் ஜெய்யும் தான் அளித்த பேட்டி ஒன்றில் எனக்கு அஞ்சலியை பிடிக்கும் அஞ்சலிக்கு என்னை பிடித்து இருக்கிறது என கூறினார்.

இதனால் இருவரும் காதலிப்பது உண்மைதான் விரைவில் திருமணம் நடக்கும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் இவர்கள் காதல் முரிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் நடிகை அஞ்சலி அளித்துள்ள பேட்டி ஒன்றில் நான் ஒருபோதும் நடிகர் ஜெய்யை காதலிக்கவில்லை. இருவரும் நட்பாக தான் பழகினோம் அதனை வேறு விதமாக கிளப்பி விட்டு விட்டார்கள் என கூறியுள்ளார்.

இவர்கள் இருவரும் அடிக்கடி ஊர் சுற்றிய புகைப்படங்கள் ஒரே மாதிரி தோசையை சுடும் போட்டிகள் என பல புகைப்படங்கள் வெளியாகி இருந்தது. அப்போ இதெல்லாம் என்ன மேடம் என அஞ்சலியிடம் ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.