Anchor Panimalar About Ajith
Anchor Panimalar About Ajith

அஜித்தை எனக்கு சுத்தமாக பிடிக்காது என கூறி விட்டு அந்தர் பல்டி அடித்துள்ளார் பிரபல தொகுப்பாளி ஒருவர்.

Anchor Panimalar About Ajith : சின்னத்திரை, வெள்ளித்திரை என எதுவாக இருந்தாலும் அவர்களை பேட்டி எடுக்கும் தொகுப்பாளர்கள் அஜித், விஜய் பற்றிய கேள்வியை கேட்காமல் இருப்பதில்லை.

இப்படியான கேள்விகளால் எத்தனையோ பிரபலங்கள் தல தளபதி ரசிகர்களிடம் சிக்கி சின்னாபின்னமாகியுள்ளனர். தற்போதும் அப்படி தான் ஒரு நூலிழையில் இந்த சர்ச்சையில் இருந்து தப்பித்துள்ளார் பிரபல டிவி சேனல் செய்தி தொகுப்பாளி பனிமலர்.

தளபதி ஸ்டைலில் போஸ் கொடுத்த பவி டீச்சர்.. அவர் கொடுத்த கேப்ஷனை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள் – இதோ பாருங்க.!

ஆம், பணிமலர் அளித்த பேட்டி ஒன்றில் அஜித், விஜய் இவர்களில் உங்களுக்கு பிடித்தவர் யார் என கேட்டதற்கு மழுப்பலான பதிலை கூறியுள்ளார்.

சிறு வயதில் எனக்கு அஜித்தை சுத்தமாக பிடிக்காது. என் தோழி அஜித் ரசிகை அவளையே நாங்கள் பயங்கரமாக ஓட்டுவோம்.

ஆனால் நான் வளர்ந்த பிறகு அந்த மனப்பான்மை மாறி விட்டது. காரணம் அவருடைய தன்னம்பிக்கை, விடாமுயற்சி தான் என கூறி பல்டி அடித்துள்ளார்.