Amritha Aiyer Reveals Lift Movie Secrets
Amritha Aiyer Reveals Lift Movie Secrets

லிப்ட் படத்தில் ஹீரோயின் மட்டுமல்ல இந்த வேலையையும் அமிர்தா ஐயரே சேர்த்து செய்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Amritha Aiyer Reveals Lift Movie Secrets : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் கவின். இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டு புகழின் உச்சத்தை அடைந்தார்.

வெள்ளித்திரையில் நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்தின் மூலமாக அறிமுகமான கவின் தற்போது லிப்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

500 கிலோ மீட்டர் பைக் ட்ரிப்.. ஏழை ரசிகரின் குடிசையில் டீ குடித்த அஜித் – பிரபல நடிகர் வெளியிட்ட புகைப்படம்.!

ஹாரர் பேய் படமான இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அமிர்தா ஐயர் நடிக்கிறார். இவர் பிகில் படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியின் கேப்டன் தென்றலாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

லிப்ட் படத்தில் அமிர்தா நாயகியாக மட்டுமல்லாமல் காஸ்ட்யூம் டிசைனராக வேலை பார்த்துள்ளார். படம் முழுவதும் ஒரே காஸ்ட்யூம் என்பதால் அதனையும் அவரே சேர்த்து பார்த்து விட்டதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.