Ajith Bike Ride
500 கிலோமீட்டர் பைக் ட்ரிப்பின் போது அஜித் ஏழை ரசிகரின் வீட்டில் டீ அருந்திய நிகழ்வை கூறியுள்ளார் பிரபல நடிகர்.

Thala Ajith Bike Trip With Suhail Chandok :  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக தன்னம்பிக்கை நாயகனாக வலம் வருபவர் தல அஜித்.

மேலும் இவர் பைக் ரைடர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. வீரம் படத்தின் போது இவரும் இப்படத்தில் நடிக்க இருந்த நடிகரும் ப்ரோ கபடி நிகழ்ச்சி தொகுப்பாளருமான சுஹல் சந்தோக் அஜித்தை பற்றி தகவல் ஒன்று கூறியுள்ளார்.

சிக்ஸ் பேக்கை கிண்டலடித்த ரசிகரை தெறித்து ஓட விட்ட மியா கலிஃபா – அவர் கொடுத்த ரிப்ளை இதுதான் (புகைப்படத்துடன் இதோ)

இவர் வீரம் படத்தில் அஜித்தின் தம்பியாக நடித்திருந்தார். அப்போது இவரும் அஜித்தும் 500 கிலோ மீட்டர் பைக் ட்ரிப் செய்துள்ளனர்.

இந்த ட்ரிப் பின் போது அஜித் டீ குடிக்க ஆசைப்பட்டு ஒரு இடத்தில் நிறுத்தி உள்ளார். அப்போது அங்கு குடிசையில் வசித்து வரும் குடும்பம் ஒன்று அஜித்தைப் பார்த்து தன்னுடைய வீட்டிற்கு அழைத்து டீ போட்டுக் கொடுத்தனர்.

அஜித்துக்கு கேக் ஊட்டும் விஜய்.. மொத்த பிரபலங்களும் ஒன்று சேர்ந்து கொண்டாட்டம் – வைரல் ஆகுது மரண மாஸ் கார்ட்டூன் புகைப்படம்.!

அஜித் அவர்கள் அன்புடன் கொடுத்த டீயைக் குடித்துவிட்டு போட்டோ எடுத்து கொள்ளலாமா என கேட்க கூச்சப்பட்ட அவர்களை அழைத்து போட்டோ எடுத்துக் கொண்டு அதனை பிரேம் போட்டு மீண்டும் அவர்களுக்கு அனுப்பி உள்ளார்.

இதனை சுஹல் சந்தோக் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.