சாய் தன்ஷிகா, முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘யோகிடா’. இப்படத்தில் ஷாயாஜி ஷிண்டே, கபீர் துஹான் சிங், எஸ்தர் மற்றும் பலர் நடித்துள்ளனர். கவுதம் கிருஷ்ணா எழுதி இயக்கியுள்ளார். தீபக் தேவ் இசையமைத்துள்ளார். பூபதி ஒளிப்பதிவு செய்துள்ளார். பிப்ரவரி 6-ந்தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.
மோனிகா சினி பிலிம்ஸ் சார்பில் செந்தில்குமார் தயாரித்துள்ள இப்படம் பற்றி, சாய் தன்ஷிகா தெரிவிக்கையில்,
‘கபாலி படத்தில் ரஜினி சாரின் மகளாக நடித்தேன். அதில் என்னுடைய பெயர் யோகி. அப்படித்தான் இந்த யோகி டா ஆரம்பித்தது. இந்த படத்துக்காக டைட்டிலை யோசிக்கும்போது, ‘கபாலி’ படத்தில் உள்ளது போல ஹேர் ஸ்டைல், ஆக்சன் இந்த படத்தில் இருந்தது. அதனால் தான் இந்த டைட்டில் வைத்தோம். கபாலி படத்துக்காக நிஜமாகவே முடியை வெட்டினேன். இந்தப் படத்தில் விக் வைத்துள்ளேன்.
இன்று அதிக படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு ஓடிடி தளங்களின் வருகை அதிகரித்துள்ளது. இந்தப் படத்தில் ஆக்சன் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. ‘பேராண்மை’ படத்தில் முதல் முறையாக ஆக்சன் காட்சிகளில் நடித்தேன். அதுதான் இன்று வரை எனக்கு உதவி வருகிறது. அனைத்து ஆக்சன் காட்சிகளிலும் டூப் இல்லாமல் நானே நடித்தேன்’என பெருமிதமாய் கூறியுள்ளார்.
yogida movie actress sai dhanshika updates