கார்த்தி நடிப்பில் ‘மார்ஷல்’ என்ற படம் உருவாகி வருகிறது. மேலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கைதி-2’ படமும் தயாராகவுள்ளது. இதற்கிடையில், நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி வரும் ‘வா வாத்தியார்’. படம் நீண்ட மாதங்களாக தயாரிப்பில் உள்ளது.
இறுதியாக டிசம்பர் 5-ந்தேதி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், கடைசி 8 நாட்கள் படப்பிடிப்பு தற்போது தொடங்கி நடைபெறுகிறது. இப்படத்தின் அடுத்த பாடல், டீசர், ட்ரெய்லர் உள்ளிட்டவை எப்போது என்ற தகவல் அறிவிக்கப்படவில்லை.
இதனால், டிசம்பர் 5-ந்தேதி ‘வா வாத்தியார்’ வெளியாகுமா என்ற கேள்வி விநியோகஸ்தர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்து டிசம்பர் 5-ந்தேதி வெளியாக வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. வேறொரு நாளில் இப்படத்தை வெளியிடும் சூழலில் தயாரிப்பு நிறுவனம் இருக்கிறது.
டிசம்பரில் வெளியானால் மட்டுமே ‘வா வாத்தியார்’ படத்தின் ஓடிடி உரிமையினைப் பெற்றுக் கொள்வோம், இல்லையென்றால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என அமேசான் ப்ரைம் நிறுவனம் கூறியிருக்கிறது. இதனால், எப்படியாவது இப்படத்தினை வெளியிட்டு விட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது படக்குழு.