விஜய் சேதுபதி வெளியிட்ட ஃபீல் மை லவ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

தமிழ் படங்களை தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் விநியோகம் செய்து, பல பான்-இந்தியா திரைப்படங்களை வெளியிட்ட தயாரிப்பாளர் ஏ.என். பாலாஜி, முதல் முறையாக தமிழில் தயாரித்துள்ள திரைப்படம் ‘ஃபீல் மை லவ்’ (Feel My Love).

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பான்-இந்தியா படமாக உருவாகி வரும் இப்படத்தில் எம்.எஸ். பாஸ்கர், ஆதித்யா பாஸ்கர், ஐரா, அம்மு அபிராமி, ராஜய்யப்பா, நோபிள் ஜேம்ஸ், பிரியங்கா மற்றும் மதுசூதனன் ராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற எம்.எஸ். சதீஷ் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். ராஜரவிவர்மா எஸ் மற்றும் பாலசுப்ரமணியன் ஜி இசையமைக்க, ‘லவ்’, ‘கொலை சேவல்’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய அஜய் மனோஜ் படத்தொகுப்பை கவனிக்கிறார். இப்படத்தை ஹரி பிரகாஷ் எம் எழுதி இயக்கியுள்ளார்.

“வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் ஒரு அதிசயம் நிகழலாம்” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம், காதல், நகைச்சுவை, உறவுகள், உணர்வுகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் கலந்த வித்தியாசமான பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்று இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது எக்ஸ் (X) பக்கத்தில் வெளியிட்டுள்ளார். காதலும் இளமையும் ததும்பும் அந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Feel My LoveVijay SethupathiVijay Sethupathi Unveils the First Look Poster of Feel My Love