விஜய் சேதுபதி குறித்து மகன் சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் ஏஸ் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.
இவரது மகன் சூர்யா தற்போது ஹீரோவாக பீனிக்ஸ் என்ற படத்தில் நடித்த முடித்துள்ளார்.இந்த திரைப்படம் வருகிற ஜூலை நான்காம் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில் அப்பா விஜய் சேதுபதி குறித்து சில சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார் அதாவது அப்பா என்னை கராத்தே கிளாஸ் பாக்ஸிங் கிளாஸ் எல்லாம் போக சொல்வாரு ஆனால் நான் போகமாட்டேன் என சொல்லுவேன் அதற்கு அடி வெளுத்து வாங்கி விடுவார்.அம்மா நல்லா அடிவாங்கட்டும் என வேடிக்கை பார்ப்பாங்க என்று ஜாலியாக பேசி உள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.