திரையுலகிலும் அரசியலிலும் பரபரப்பு நிலவி வரும் சூழலில், நடிகர் சத்யராஜின் மகனும் நடிகருமான சிபி சத்யராஜ், தளபதி விஜய் மீது தனக்குள்ள தீராத அன்பை வெளிப்படுத்தி உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
முதல் சந்திப்பின் நினைவுகள்: 1993-ல் பொள்ளாச்சியில் தனது தந்தையின் பிறந்தநாள் விழாவில் விஜய்யைச் சந்தித்ததை நினைவுகூர்ந்துள்ள சிபி, அப்போது பார்த்த அந்த அடக்கமான இளைஞன் இன்று லட்சக்கணக்கான இதயங்களை வென்ற அசைக்க முடியாத சக்தியாக உருவெடுப்பார் எனத் தான் எதிர்பார்க்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
தனிப்பட்ட வாழ்வின் அங்கமான விஜய்: தனது காதல் மற்றும் திருமண வாழ்க்கையிலும் விஜய்யின் படங்கள் முக்கியப் பங்காற்றியுள்ளதை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். 2000-ம் ஆண்டில் தனது காதலியுடன் (தற்போதைய மனைவி) சென்ற முதல் சந்திப்பே ‘பிரியமானவளே’ திரைப்படத்தின் போதுதான் நிகழ்ந்தது என்ற சுவாரஸ்யமான தகவலையும் அவர் பகிர்ந்துள்ளார்.
புதிய பாதைக்கு ஆதரவு: விஜய் நடிப்பிலிருந்து விலகுவதை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், ஒரு தம்பியாகவும் ரசிகனாகவும் அவரது புதிய அரசியல் பயணத்தை மதிப்பதாகவும், எப்போதும் அவருக்குத் துணையாக நிற்பேன், வென்று வா தலைவா! நாங்க இருக்கோம் என்றும், சிபி சத்யராஜ் அந்த கடிதத்தில் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.