வெற்றிமாறன்-சிம்பு இணைந்துள்ள படத்தின் தகவல்கள் காண்போம்..
கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் சிம்பு, வெற்றிமாறன் கூட்டணியில் STR 49 என்ற திரைப்படம் தயாராகவிருந்தது. இதற்கான ப்ரோமோ ஷூட் கூட நடத்தப்பட்டது. அந்த ப்ரோமோவின் மூலம் இப்படத்தின் அறிவிப்பை வெளியிடலாம் என படக்குழு முடிவெடுத்திருந்தது. ஜூலை மாதமே இதன் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்குள் சில சிக்கல்கள் ஏற்பட்டதாக தெரிகின்றது.
அதன் விளைவாக இன்றுவரை இப்படத்தின் அறிவிப்பு வரவில்லை. தயாரிப்பாளர் மாறலாம், ஹீரோ மாறலாம் என்பது போன்ற பல யூகங்கள் STR 49 படம் பற்றி இருந்து வந்தது. மேலும் ‘பார்க்கிங்’ பட இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருந்த படம், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகவிருந்த படம் என அடுத்தடுத்து சிம்பு நடிக்கவிருந்த படங்கள் தாமதமாகிறது. இந்நிலையில், தற்போது வெற்றிமாறன் தெரிவிக்கையில்,
‘என்னுடைய அடுத்த படத்தின் அறிவிப்பு இன்னும் 10 -15 நாட்களில் வெளியாகும். அந்த படம் முடிந்த கையோடு தனுஷின் ‘வடசென்னை-2′ பட வேலைகளை துவங்குவேன்’ என அறிவித்திருக்கிறார்.
இதன் மூலம் சிம்பு படத்தின் அறிவிப்பை இன்னும் 15 நாட்களுள் அறிவிப்போம் என வெற்றிமாறன் கூறியிருப்பது சிம்பு ரசிகர்களை சந்தோஷப்படுத்தி உள்ளது. குறிப்பாக, இப்படத்தில் இருந்த சில சிக்கல்கள் தீர்ந்து தற்போது சுமூகமான முடிவு ஏற்பட்டிருப்பதாக தெரிகின்றது.