‘ரெட்ரோ’ படத்துக்கு போட்டியாக ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ரிலீஸா?: தயாரிப்பாளர் விளக்கம்..

‘ஒரு படத்தின் ரிலீஸ் தேதியை ஓடிடி தீர்மானிக்கிறது’ என்கிறார் தயாரிப்பாளர். இது பற்றிய தகவல்கள் காண்போம்..

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘ரெட்ரோ’ படம் மே 1-ந்தேதி வெளியாகிறது. இதே நாளில் பான் இந்தியா அளவில் நானி நடித்துள்ள ‘ஹிட்’ படமும் வெளியாகிறது.

இந்நிலையில், ஃபீல் குட் மூவியாக சசிகுமார்-சிம்ரன் கணவன் மனைவியாக நடித்துள்ள ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படமும் ரிலீஸாகிறது. இது குறித்து ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் தெரிவிக்கையில்,

‘சூர்யா சார் படத்துடன் மோத வேண்டும் என்பதெல்லாம் எங்களுடைய நோக்கம் கிடையாது. இப்போதெல்லாம் ஓடிடி நிறுவனங்கள் தான் படங்களின் ரிலீஸ் தேதியை தீர்மானிக்கும் இடத்தில் இருக்கின்றன. அதன் காரணமாகத்தான் இந்த ரிலீஸ் ஏற்பட்டுள்ளது. ரெட்ரோ’ பெரிய படம். அந்த படத்துக்கும் எங்களுக்கும் எந்த வகையிலும் போட்டியில்லை’ என கூறியுள்ளார்.

‘ரெட்ரோ’ கேங்ஸ்டர் படமாக வெளியாக உள்ளது. அந்த படத்திலும் ஆக்‌ஷன் காட்சிகளை தாண்டி ரொமான்ஸ் மற்றும் எமோஷனலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருப்பதாக கார்த்திக் சுப்பராஜ் கூறியுள்ளார். ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்துக்கு கிடைத்துள்ள பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் காரணமாக படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

பொதுவாக, பெரிய ஸ்டார் படம், பெரிய பட்ஜெட் படம் என்பதெல்லாம் வெற்றிக்கு முக்கிய காரணிகளாக அமையாது என்பதுதானே திரைவரலாறு.!

tourist family film producer explains to retro movie
'ரெட்ரோ' படம்actor suriyaretro movietourist family movieகார்த்திக் சுப்பராஜ்